ஒரு 'வடுகனோ' ஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ', எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை. ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியு டனும், சொரிசிரங்குடனும், வேர்வை நாற்றத்துடனும், வெள் ளைப் படையுடனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும், இட்லி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து 'சாமி, சாமி' என்று 'சொர்க்கவாசல் பிரசாதம்' போல் கேட்டு வாங்கிச் சாப் பிடத் தயாராயிருக்கின்றோம். இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. பண்டிதர்களிட மும், நாகரிக செல்வவான்களிட முமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன். இவை சுயமரியாதைக்கு ஏற்புடையதா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment