பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

சென்னை, அக். 22- பிஇ, பிடெக் கவுன்சலிங்கில் பங் கேற்று வரும் மாணவ, மாண வியர்களில் ஒருவர் கூட 124 பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பம் தெரிவிக்க வில்லை.


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரம் இடங் களில் மாணவர்கள் சேர்வ தற்கு பதிவு செய்திருந்த நிலை யில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதி பெற்றுள்ளனர்.


இந்நிலையில் தொழிற் கல்வி மாணவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும் நடந்தது. அதில் 1533 மாணவ மாண வியர் ஆன்லைன் மூலம் பங் கேற்றனர். அவர்களில் 946 பேர் மட்டுமே கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். பொதுப்பிரிவு கவுன்சலிங் 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.


இந்நிலையில், இதுவரை முடிந்த சுற்றுகளின் அடிப் படையில் தமிழகத்தில் உள்ள 461 கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 689 இடங்களுக்கு கவுன்சலிங் நடந்து வரும் நிலையில், இரண்டாது சுற்றின் முடிவில் 20 ஆயிரத்து 925 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளில் 124 கல்லூ ரிகளில் உள்ள இடங்களை ஒரு மாணவர் கூட தேர்வு செய்யவில்லை. 221 கல்லூரி களில் 1 சதவீதத்துக்கும் குறை வாகவே கல்லூரிகளை மாண வர்கள் தேர்வு செய்துள்ளனர். 347 கல்லூரிகளில் உள்ள இடங்களில் 5 சதவீதத்துக்கும் கீழ் தேர்வு செய்யவில்லை. மொத்தமாக பார்க்கும் போது, 22 கல்லூரிகளில் தான் 75 சதவீத்துக்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன. இது வரை நடந்து முடிந் துள்ள இரண்டு சுற்றுகளின் இறுதியில் 40 சதவீத மாண வர்கள்  கவுன்சலிங்கில் பங் கேற்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment