நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜாலவித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்திநுட்பத்துடனும், தந்திரத்துடனும் கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிறெரிய - எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல் மனதுடனும், பசியுடன் குழந்தைகளும், பெண்களும், மொண்டி முடங்களும், கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில் செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும், அறியாத்தனமென்றும், சுலபத் தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட்டார் களா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment