கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்று வதற்கும், தான் மற்ற மக்களைவிட அதிக லாபம் சம்பாதிப்ப தற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோயில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப் போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக் காரியம் செய்து வயிறு பிழைப் பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக்கவுமான காரியத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா? மேலும் முட்டுக்கட்டையாய் இருக்க மாட்டார்களா? மற்றும் கடவுள் பிரச்சாரமும் செய்யமாட்டார்களா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment