கேரளத்தைப் போல் தமிழகத்திலும் 100 நாள் வேலையை ஏன் மேற்கொள்ளக்கூடாது?
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை, அக்.14, கேரளாவில் நடைபெறுவதுபோல் தமிழகத்திலும் தனியார் விவசாய நிலங்களில், 100 நாள் வேலைதிட்டப் பணியாளர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது எனக் கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மதுரை பேரையூரை சேர்ந்த சிறீனிவாசகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை வாய்ப்புதிட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யப்பட்டு வருகின்றன.கிராமங்களில் வேலை இல்லாமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் மதுரை சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தங்கரையோரம் கிராம ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த கிராம ஊராட்சியில் 100நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு திங்களன்று நீதிபதிகிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிராமங்களில் வேலை இல்லாமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத்திட்டம் தவறாக செயல்படுத்தப்படுகிறது.100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் வேலையில் கவனம் செலுத்தாமல், வேலைபார்ப்பது போல் ஏமாற்றுகின்றனர். ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வேலை வாய்ப்பை, பொது மக்கள் முறையாக வேலைபார்க்காமல் தங்களுக்கு தாங்களே ஏமாற்றுகின்றனர். இயந்திரங்களை கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால்,ஏன் அரசு அவர்களுக்கு வேலை வழங்குகிறது. இதை ஏன் தவறாக பயன்படுத்துகின்றனர்.100 நாள் வேலைத் திட்டத்தால்,அங்கும் வேலை நடப்பதில்லை. நடக்க வேண்டிய தனி நபர்விவசாயப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் தனியார் விவசாய நிலங்களில் பங்களிப்புடன் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இதுபோல் நடைபெறவில்லை. எனவே கேரளாவில் நடைபெறுவது போல் ஏன் தமிழகத்திலும் தனியார் விவசாய நிலங்களில், 100 நாள் வேலைத் திட்டபணியாளர்களை பயன்படுத்தலாமா? இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment