இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை


மாஸ்கோ, அக்.23  ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.


கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்ட தாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஅய்எப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப் பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்கு வதாகத் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜி) ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித் துள்ளது.


சோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவன ஆய் வகங்களுக்கு  டி.சி.ஜி.அய் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனை நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும்.


கிளினிக்கல் பரிசோதனையின் 3-ஆவது கட்டத்திற்குச் செல்வதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோ தனைகள் மேற்கொள்ளப்படும் என்று டிசிஜிஅய் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் மேற் கோளிட் டுள்ளது.


ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண் டாம் கட்ட மருத்துவ பரிசோத னைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனு மதி அளிக்கலாம் என டிசிஜிஅய்யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந் துரை செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.


2ஆம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ஆம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் மருந்து செலுத்தி பரி சோதனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கூறிய தாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


 


No comments:

Post a Comment