கடைகள், வணிக வளாகம் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

கடைகள், வணிக வளாகம் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி

சென்னை, அக். 22- தமிழ்நாடு முழுவதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி  கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற் றும் தேநீர் கடைகள் உள் ளிட்ட அனைத்து  கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 9 மணி வரை திறக்கலாம் என்பதை இன்று முதல் இரவு 10 மணி வரை  திறக்க அனு மதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத் திய அரசின் வழிகாட்டுதலின் படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவார ணங்களை வழங்கி, முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.


அதனால்தான் தமிழ் நாட்டில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும் புவோர் சதவிகிதம் நாட்டி லேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. எதிர்வரும் பண்டிகை காலத் தினை கருத்தில் கொண்டும்,  பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவ சியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ் நாடு முழுவதும் முழு கட்டுப் பாட்டு பகுதி தவிர மற்ற பகு திகளில் அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவ கங்கள் மற்றும் தேநீர் கடை கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளா கங்களும் இன்று (22ஆம் தேதி) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment