பாடத்திட்டங்களை குறைப்பதுபற்றி 10 நாளில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

பாடத்திட்டங்களை குறைப்பதுபற்றி 10 நாளில் முடிவு

அமைச்சர் தகவல்


சென்னை, அக்.20 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நேற்று  (19.10.2020) ஆலோசனை மேற்கொண்டார்.


 இந்த ஆலோசனையில், பொதுத்தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக் குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், 2-ஆம் பருவ புத்தகம் வழங்குதல், ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் மதிப் பெண்களை ஆய்வு செய்தல் குறித்து ஆலோ சிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்  கூறிய தாவது:- “பள்ளிகளை திறப்பதற்கு தற்போது சாத்திய மில்லை. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்ட பிறகு முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர்தான் அறிவிப்பார்.


‘நீட்’ தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை வரும் டிசம்பரில் தொடங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பாடத் திட்டங் களை குறைப்பதற்கான ‘புளு பிரிண்ட்’ அய் மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதல்- அமைச்சருடன் ஆலோசனை மேற் கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளி யிடப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.


 


உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது



ஜெனீவா, அக்.20 உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந் தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டி யுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்கு தலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்ட வர்கள் எண்ணிக்கை 3.03 கோடியைக் கடந்தது.


கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 72 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலி யானோர் எண்ணிக்கை 11.22 லட்சத்தைக் கடந்துள்ளது.


No comments:

Post a Comment