பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டிய 10% இட ஒதுக்கீடு?
பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் (ஜூலை 23, செவ் வாய்க்கிழமை) இணையத் தில் வெளியிடப்பட்டன. எட் டாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வை லட்சக்கணக்கா னோர் எழுதி இருந்தனர்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம், நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்வு முடிவுகள் - சமூகநீதி யைக் குழிதோண்டிப் புதைக் கும் வகையில் அமைந் துள்ளன.
100 மதிப்பெண்களுக் கான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 'கட் ஆஃப்' மதிப்பெண்ணை ஸ்டேட் பாங்க் நிருவாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
பொதுப் பிரிவு - 61.25,
தாழ்த்தப்பட்டோர் - 61.25
பழங்குடியினர் - 53.75
பிற்படுத்தப்பட்டோர் (OBC) - 61.25
உயர்ஜாதி ஏழைகள் (EWS) - 28.5
என்ற அதிர்ச்சி தரும் விவரம் வெளிவந்துள்ளது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட (Socially and Educationally Backward) மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய இடங்களை, EWS என்னும் அக்கிரமமான, சட்ட விரோ தமான சமூக அநீதிச் சட்டத் தின்மூலம் பார்ப்பனர்கள், உயர்ஜாதியினர் தட்டிப் பறித்துள்ளனர்.
ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்துக்குக் கீழ் பெறு வோர் “ஏழைகள்'' என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இவர்கள்தான் ஏழை யாம்! பொருளாதாரத்தில்கூட இப்படி ஒரு வருணாசிரமம்.
தாழ்த்தப்பட்ட, பழங் குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை கள், உயர்ஜாதி ஏழைகளை விட மிக அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் வேலை பெற முடியும் என்கிற நிலை இதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர்ஜாதி ஏழை பார்ப் பனர்களுக்கு 28.5 மதிப் பெண் எடுத்தால் வங்கி வேலை; அதுவே தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 61.25 மதிப் பெண் எடுத்தால்தான் வேலை என்பது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்! சமூகநீதியின் அடித்தளத்தில் அமிலத்தை ஊற்றிய கொடுங்கோன்மை அல் லவா?
- மயிலாடன்
No comments:
Post a Comment