விருத்தாசலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 1, 2020

விருத்தாசலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவு


விருத்தாசலம், அக். 1- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவாக  பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் எனும் தலைப்பில் செப்டம்பர் 13 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.


  இதில்,  திராவிடர் கழக சோழிங்கநல்லூர்  மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.நித்தி யானந்தம் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மண்டல  இளைஞரணி செயலாளர் வே.இராஜ வேல் தலைமை வகித்தார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ. ஆசைத்தம்பி, தஞ்சை இரா.வெற்றிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் இணைப்புரை வழங்கினார்.


 நிறைவாக, ம.தி.மு.க அரசியல் ஆய்வுச் செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரையாற் றினார்.


 சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம். அது தோன்றுவதற்கான காரணங்கள் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழகம் இருந்த நிலைமை சுயமரியாதை இயக்க காலகட்டத்தில் மக்களின் நிலை ஆகியவற்றை விளக்கி தெளிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியதன் நோக்கம் குறித்தும், சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் மக்களுக்குச் செய்த தொண்டுகள் குறித்தும், சுயமரியாதை இயக்கத்தலைவர்களின் சமூகப் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்து பேசினார்.


நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் ராஜா, சென்னை மண்டல இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் பிர பாகரன், திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் அன்பு ராஜா, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் அழகர்,  காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர் இளந் திரையன், தென்சென்னை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் மணித்துரை,  ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் ,விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட் டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத் தாசலம் மாவட்ட மாணவரணி தலைவர் ராம ராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தஞ்சை மாநகர இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ரமா பிரபா ஜோசப், மத்தூர் அரங்க .ரவி கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக் குரைஞர் மதிவதனி, தருமபுரி மண்டல இளை ஞரணி செயலாளர் ஆறுமுகம், நீடாமங்கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணி வேல், அல்லூர் பாலு, ராஜமாணிக்கம், துரை ராஜன்  உள்பட பலர் கலந்து உட்பட பலர்  கொண்டனர்.


நிறைவாக கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.ஜெகந்நாதன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment