பொறியியல் கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1இல் வகுப்புகள் தொடங்க ஏஅய்சிடிஇ உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

பொறியியல் கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1இல் வகுப்புகள் தொடங்க ஏஅய்சிடிஇ உத்தரவு

சென்னை, அக். 21- பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.


இதுகுறித்து இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (ஏஅய்சிடிஇ) கூறியுள்ளதா வது: தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத் தும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஅய் சிடிஇ) 2020-21ஆம் கல்வி யாண்டில் பொறியியல் (இன் ஜினியரிங்) கல்வி முதலா மாண்டு வகுப்புகளைத் தொடங் குவதற்கான புதிய அட்டவ ணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண் டாம் ஆண்டில் சேரும் டிப் ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத் தும் நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.


டிசம்பர் 1ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர் களுக்கு வகுப்புகள் தொடங் கப்பட வேண்டும். நாடு முழு வதும் பல்வேறு மாநில அரசு கள் மற்றும் கல்வி நிறுவனங் களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆன்லைன் மூலம் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தற்போது நடத்தி வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி வரை நடை பெறுகிறது.


அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெறும். பின்னர் மாணவர் சேர்க்கை குறித்து இறுதி நிலவரம் தெரியவரும். இந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதிக்குள் பொறியியல் முதலாமாண்டு வகுப்புக ளைத் தொடங்க ஏஅய்சிடிஇ அறிவுறுத்தியுள்ளதால் தமிழ கத்தில் டிசம்பருக்கு முன்பா கவே பொறியியல் முதலா மாண்டு வகுப்புகள் தொடங் கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment