ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (1)


வாழ்க்கையில் பிறரது சூழ்ச்சி, தந்திரங் களுக்கு ‘இரையாகி', ஏமாந்து பிறகு வருந்தும் நிலை தவிர்க்கப்படுவதும் சரியான வாழ்வி யலின் முக்கிய அம்சம் என்று கருதப்படல் வேண்டும்.


சிறு வயதில் நாம் படித்த அல்லது நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட சுவையான கதை களில் ஒன்று காகம் - வடை - நரி கதை அல்லவா?


அதுபோன்ற பல கதைகளில், மிருகங் களை பேச வைத்து, தக்க வாழ்க்கைப் பாடங் களை போதிக்கும் முறை பழைய நூல்களில் - இலக்கியங்களில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.


இவ்வாண்டு நூற்றாண்டு விழா கொண் டாடப்பட வேண்டிய சீரிய தமிழ்த் தொண் டர், புரட்சிக் கவிஞர் நூல்களை அவரது விருப்பத்திற்கேற்ப மிகச் சிறந்த முறையில் பதிப்பித்த இலக்கியச் செம்மல் முல்லை முத்தய்யா அவர்களின் ‘பஞ்ச தந்திரக் கதைகள்' நூலையும் படிக்க வேண்டும்!



பல பாடங்களை நம்மால் கற்றுக் கொள் ளப்பட்டு விழிப்பான வாழ்க்கைக்குரிய எச்ச ரிக்கை மணியாகவும் அவை அமைந்துள்ளன என்பதால்.


அவர் பதிப்பித்துள்ள அந்நூலில் முல்லை (பி.எல்) முத்தய்யா அவர்கள் எழுதும் முன்னு ரையில்,


“புகழ்பெற்ற மராத்தி கதாசிரியர் காண் டேகர் அவர்களிடம் ‘ஒரு தீவுக்கு நீங்கள் பயணம் செல்ல நேரிடுமானால், எத்தகைய நூல்களைக் கொண்டு செல்வீர்கள்?’ என ஒருவர் கேட்டார்.


அதற்கு “பஞ்ச தந்திர கதைகள்”, “ஆயிரத்து ஓர் இரவுகள்”, “விக்கிரமாதித்தன் கதைகள்”, “ஈசாப் கதைகள்” ஆகிய நான்கு நூல்களையும் எடுத்துச் செல்வேன் என பதில் அளித்தார் அவர்!


அவர் குறிப்பிட்ட நான்கு நூல்களும் படிக்க படிக்கத் தெவிட்டாத உலகப் புகழ் பெற்ற கதைச் செல்வங்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பல்வேறு வாசகர்களுக்கும் களிப்பூட்டிக் கொண்டிருக்கும் கதைக் களஞ்சியங்கள். அவை நிலைத்து நின்று பெருமை அளிக்கின்றன.


‘பஞ்ச தந்திர’க் கதைகளின் மூல நூல் பிராகிருத மொழியில் (சமஸ்கிருதத்திற்கு முந்தைய மொழி அது) எழுதப்பெற்று அழி வுற்று, பின்னர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பெற்றதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.


50 மொழிகளில் 200-க்கு மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன.


பத்தொன்பதாம் நூற்றாண்டில், வீரமார்த் தாண்டவர் தமிழ்ச் செய்யுள் நடையில் இயற்றினார். பின்னர், தாண்டவராய முத லியார் அவர்கள் தமிழ் உரை நடையில் இயற்றினார். ஆனால் அவை இரண்டும் முழுமையானவை அல்ல.


‘பஞ்ச’ என்றால் ‘அய்ந்து’ என்று பொருள். தந்திரம் என்றால் ‘உபாயம்', ‘சூழ்ச்சி', ‘யுக்தி' ஆகியவற்றைக் குறிக்கும்.


முதல் தந்திரம் - நட்பைக் கெடுப்பது


இரண்டாவது தந்திரம் - நட்பைப் பெறுவது


மூன்றாவது தந்திரம் - அடுத்துக் கெடுப்பது


நான்காவது தந்திரம் - அடைந்ததை அழிப்பது


அய்ந்தாவது தந்திரம் - ஆராயாமல் செய்வது


- இவை அய்ந்தும் இந்த பஞ்ச தந்திரக் கதைகளுக்கு அடிப்படைக் கருத்துகள் ஆகும்.


இவற்றை ஒவ்வொரு பகுதியிலும் பிரித்து, மூலக் கதையோடு மேற்கோளாக ‘கதைக்குள் கதை’யாகக் கூறப்பட்டுள்ளன!


உலக வாழ்க்கை, மனித இயல்பு, பகுத் தறிவு கூறும் புத்திமதி, சுவையான கற்பனை யோடு, வீரம், சோகம், சூழ்ச்சி, அன்பு, சோரம், ஈகை, ஏமாற்றம், நட்பு, தியாகம், நய வஞ்சகம் - இப்படி எண்ணற்ற கருத்துகளை இக்கதைகளில் படித்து மகிழலாம்.


ஒவ்வொரு கதையிலும் நிகழ்ச்சிக்கு ஏற்ப நீதி மொழிகள் கூறப்படுகின்றன. அவை நடைமுறை வாழ்க்கைக்குப் பொருத்தமா கவே அமைந்துள்ளன...”


இப்படிப்பட்ட நூலையும் வாழ்க்கைத் துணைவனாகக் கொண்டு “கற்க” வேண்டும் - படித்தால் மட்டும் போதாது! வெளுத்த தெல்லாம் பால் என்று நம்பி மோசம் போகும் நல்ல உள்ளங்களுக்கு இவை நல்ல அறி வுறுத்தல்கள்!


எச்சரிக்கை மணிகளாகவும் ஒலிக்கக் கூடியவைகள். ஆதலால் அதனையும் பார்ப்போம்!


No comments:

Post a Comment