நியூயார்க், அக். 14- இந்தியாவில் கரோனா காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்படுவது எதிர் கால வருவாயில் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தும் என்று உலக வங்கி கூறி உள்ளது.
தெற்காசியா பிராந்தியமானது தற்போதைய சூழ்நிலையில் பள்ளி மூடல்களிலிருந்து 622 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரி டும் என்று அறிக்கை ஒன்றில் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த சூழ்நிலையில் 880 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் உலக வங்கி மேலும் கூறி இருப்பதாவது: எல்லா நாடுகளும் அவர்களின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கணிசமான பங் குகளை இழக்கும். அனைத்து தெற் காசிய நாடுகளிலும் தற்காலிக பள்ளி மூடல்கள் மாணவர்களுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் 391 மில்லியன் மாணவர்கள் பள்ளி செல்லாமல் உள்ளனர். இது கற்றல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கு கிறது. பெரும்பாலான அரசாங்கங்கள் பள்ளி மூடல்களின் தாக்கத்தைத் தணிக்க மகத்தான முயற்சிகளை மேற் கொண்டாலும், தொலைதூர கற்றல் முயற்சிகள் மூலம் குழந்தைகளை ஈடுபடுத்துவது கடினம்.
கரோனாவானது, 5.5 மில்லியன் மாணவர்கள் கல்வி முறையிலிருந்து விலகுவதற்கும், கணிசமான கற்றல் இழப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக இருக்கலாம். இது ஒரு தலைமுறை மாணவர்களின் வாழ் நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத் தும்.
ஏறக்குறைய 5 மாதங்களாக குழந் தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள் ளனர். நீண்ட காலமாக பள்ளி செல் லாமல் இருப்பது என்பது குழந்தைகள் புதிய விஷயங்களை கற்றுக்கொள் வதை நிறுத்துவதோடு மட்டுமல்லா மல், அவர்கள் கற்றுக்கொண்ட சில வற்றையும் மறந்து விடவும் வாய்ப்பாக அமைகிறது.
பிராந்திய நாடுகளை பொறுத்த வரை, பெரிய இழப்பு இந்தியாவில் ஏற்படும். எல்லா நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்குகளை இழக்கும். குறிப்புக்காக, தெற்காசிய அரசாங்கங் கள் ஆண்டுக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே முதன்மை மற்றும் இடைநிலை கல் விக்காக செலவிடுகின்றன என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment