நியாயம் வேறு -_ விவகாரம் என்பது வேறு . விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக்கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தியில்லாத காரணத்தால், பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபவம் ஆகியவை இல்லாத காரணத்தால் ஒருவிஷயத்தைப் பற்றிச் சாதித்துத் தோல்வியுற்று விட்டால், அது நியாயம் கண்டுபிடித்ததாகி விடுமா? அதபோல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது.
('புரட்சி' 31.12.1933)
No comments:
Post a Comment