காலஞ்சென்ற திரு.ஏ.ராமச்சந்திர அய்யர் என்பவர் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்சன் பெற்றும், கவர்மெண்ட் வித்தியா இலாகா வில் வேலை பார்த்தவர். சித்தூரில் கவர் மெண்ட் ஸ்கூல் இருந்த பொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு :-
சுயேட்சை பெரிதும் பாராட்டும் பிராமணர்களின் விஷயமாய், சவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ்நானம், தச தானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக் கூடாதென்று என்னு டைய வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன், முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள் ளளவும் பயனில்லையென்று நான் நிச்சய மாய் நம்புகிறேன். தங்களுடைய சுய நலத் தினால் பிராமணர்கள், இறந்து போனவர் கள் சந்ததியாரிடமிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்களே யொழிய வேறில்லை. இட்டாருக்கு இட்ட பலன் சித்திக்கும். செய்யும் கிரியைகளால் இறந்து போன வருக்கு நற்கதி கிடைக்குமென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர் களை கவுரவப்படுத்த வேண்டுமென்பதை யும், அவர்களை மறந்துவிடக் கூடாதென் பதையும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். இறந்து போனவனைக் குறித்து வருஷத் தில் ஒரு நாள் கொண்டாடி அவனுடைய கன்மத்திற்குக் குறைவில்லாமல் அவனு டைய சந்ததியாரும் பந்துமித்திரர்களும் நன்னடக்கையுடன் நடந்து கொள்வது போதும். ஒரு பிறவியில் செய்த கன் மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சித் திக்கும். ஆதலின் ஒருவன் சந்தோஷத் துடன் சுகித்திருப்பதற்குக் காரணம் அவ னுடைய செய்கைகளேயாகும். சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அது கெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன்.
ஆகவே, இதைக் கண்ணுறும் நண் பர்கள் இனிமேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல் அவர்கள் என்ன சொல்லுகிறார்களென்பதைக் கவ னித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களை யும், மூடப்பழக்கங்களையும் அடிமைப் புத்தியையும் அடியோடு அகற்றி சுய மரியாதை பெற்று மனிதத்தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ்வாராக!
- குமரன், 'குடிஅரசு', 19.10.1930
No comments:
Post a Comment