காட்டுமன்னார்குடி, அக். 16- காட்டுமன்னார்குடியில் 15.10.2020 அன்று உ..பி.யில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்முறை மற்றும் புவனகிரி தெற்குத் திட்டை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர வைத்ததைக் கண்டித்து கழகச் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், ஒன்றிய செயலாளர்கள் ஆ.ஆனந்த பாரதி, மு.குணசேகரன், நகர கழக செயலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்ற னர். ஒன்றிய தலைவர் பெரி யண்ணசாமி, ஆண்டிபாளை யம் முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் சிற்பி சிலம்ப ரசன், நகர தி.மு.க. செயலர் கணேச மூர்த்தி, நகர வி.சி.க. செயலர் சக்திவேல் சரவணன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பிரகாஷ், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி நாக ராசன், ஆனந்தவீரன், கு. தேசிங்கு, கே.பி.குமார், அண் புமணி, செயின் ராமன், விமல் ராஜ், ஆர்எஸ்பி கட்சி தோழர் கள் வெற்றிக்குமார், மைனர், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன் கண் டன உரையாற்றினார். ஒன் றிய அமைப்பாளர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment