மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 28, 2020

மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் -


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கழகத் துணைத் தலைவர்,  பொதுச்செயலாளர்  பங்கேற்றனர்



சென்னை, செப். 28- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அண்மையில் மத்திய பி.ஜே.பி. மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தைக் கண்டித்து இன்று (28.9.2020) காலை தமிழகம் முழுவதும் தி.மு.கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.


கடந்த 20.9.2020 அன்று விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்களை எதிர்த்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக மாவட்டத் தலைநகரங்களிலும் - நகராட்சி மற்றும் ஒன்றி யங்களிலும் "கரோனா" பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில் 28.9.2020 அன்று காலை "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துவது என 21.9.2020 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமை யில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


காஞ்சிபுரம்...


அதன்படி இன்று (28.9.2020) காலை 10 மணி யளவில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.


சென்னை வள்ளுவர்கோட்டம்...



சென்னை மேற்கு மாவட்ட தி.மு.கழக மாவட்ட செயலாளர் சிற்றரசு முன்னிலையில் வள்ளுவர் கோட்டத்தின் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.


திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திரா விட முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலா ளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் மேடையில் முழக்கங்களை எழுப்பினர்.


நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் 'சர்வாதிகார'மாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடர் பான சட்டங்கள், "உணவுப் பொருள்களான வேளாண் விளை பொருள்களை வரம்பின்றில் பதுக்கி" வைக்கும் சமூக விரோதச் செயலுக்கு வழி செய்கிறது.


"விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தை" சீர் குலைக்கும் புதிய திருத்தங்கள் ஏற்படுத்தப்படு கின்றன. இவற்றின் மூலம், "கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து" பதுக் குதல் தாராளமயமாக்கப்படுகிறது.


"விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்" மூலம் "கார்ப்ப ரேட் - ஏழை விவசாயி" என்ற சமன்பாடற்ற, ஓர் ‘‘ஒப்பந்த வணிகம்" திணிக்கப்படுகிறது.


விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசா யிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது. எனவே இம்மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் அனைத்து விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப் புகளும் - வணிக சங்கங்கள், விவசாயப் பெருங் குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளும் பெரும் திரளாக பங்கேற்றனர்.


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வட சென்னை மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், சேத்பட் நாகராஜ், பாலு, கோ.ராக வன், க,கலைமணி மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட


ஒலி முழக்கங்கள்


1             திரும்பப்பெறு... திரும்பப் பெறு...


               பா.ஜ.க. அரசே... மோடி அரசே...


               விவசாயிகளை வஞ்சிக்கும்


               வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!


2             ஓயமாட்டோம்... ஓயமாட்டோம்...


               விவசாயிகள் நலன் காக்கும்வரை


               ஓயமாட்டோம்... ஓயமாட்டோம்...


3             வீழ்வது நாமாக இருப்பினும்


               வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும்


4             எதிரானது... எதிரானது...


               பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்


               விவசாயிகளுக்கு எதிரானது


               விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது


5             எதிரானது... எதிரானது...


               பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம்


               மாநில உரிமைகளுக்கு எதிரானது


               கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது


6             அனுமதியோம்... அனுமதியோம்...


               கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும்


               பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை


               அனுமதியோம் அனுமதியோம்...


7             வாருங்கள்... விவசாயிகளே வாருங்கள்...


               உங்களுக்கான ஆர்ப்பாட்டத்துக்கு வாருங்கள்!


               வாருங்கள் மக்களே வாருங்கள்...


               நம் மண்ணைக் காக்க வாருங்கள்!


No comments:

Post a Comment