பொன்பரப்பி, செப்.23 தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 பொன்பரப்பியில் கழகக் கொடி ஏற்றப்பட்டு அய்யா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது . அதன் பிறகு அன்று இரவு கொடிக்கம்பத்தையும் படத்தையும் விஷக் கிருமிகள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இந்த செய்தியை தெரிந்து இந்நிகழ்வு இடத்திற்கு சென்று காவல்துறைக்கு செய்தியை தெரிவித்து ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவன் மாவட்ட துணைச் செயலாளர் சேகர் மண்டல செயலாளர் மணிவண்ணன் பொன்பரப்பி சுந்தரவடிவேலு, வீராக்கன், திராவிட விஷ்ணு, பரணம் ராமதாசு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன் ஒன்றிய தலைவர் சங்கர் மற்றும் தோழர்கள் சென்று ஒன்றிய கழக தோழர்கள் இணைந்து புகார் அளித்தனர்.
மேலும் ராயர் என்பவர் தொடர்ந்து அய்யாவை தரக் குறைவாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்தார். அவர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. ஆதலால் அவர் மீது அளிக்கப் பட்ட புகாரின் பேரில் இன்று விடியற்காலம் காவல்துறை அவரைக் கைது செய்தது. அவரே கொடிக் கழக கம்பத்தை சேதப் படுத்தியதும் தெரிய வருகிறது.
ரூத் பேடன் கின்ஸ்பர்க் அமெரிக்காவை ஆட்டிப் படைத்த பெண் !
அமெரிக்காவின் உச்ச நீதி மன்றம் 87 வயதான ரூத் பேடன் கின்ஸ்பர்க் என்ற அம்மையாரை இழந்தது ! தலைமை நீதிபதி சரித்திரத்தை இழந்து விட்டோம். தளர்வடையாத , உறுதியான உழைப்பாளி என்று பாராட்டினார்.
ஆரம்ப முதலே பெண்ணு ரிமைக்காகவும், சமத்துவத் திற்காகவும் போரடியவர்.படித்து முடித்ததும் பெண் என்பதால் ஒதுக்கப் பட்டவர். தமது வாழ்க் கைத் துணைவரைப் பெண்களுக்கு உரிமையும் வாய்ப்புக் களும் வேண்டும் என்று நினைக்கும் நல்லவர் என்று பாராட்டியவர்.
அரசமைப்புச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட பெரிய அறிவுரை சொன்னார் ஒரு புதிய நீதிபதி. அவரை "அப்போது ஓட்டுரிமை?' என்றே இரண்டு வார்த்தைகளால் அடக்கியவர்! அவரை இழந்தது மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்னரே டிரம்ப் பிற்போக்குவாதி ஒருவரை நியமித்து விடத் துடிக்கிறார் என்பது தான் மிகவும் வருத்தமளிக்கின்றது. அவரை நான் ஒரு முறை அருகே பார்த்து வியந்துள்ளேன்.
கரோனா தொற்றைக் கண்டறிய 30 ஆயிரம் பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய முடிவு
தமிழக சுகாதாரத் துறை தகவல்
சென்னை, செப்.23 தமிழகத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு நடத்தியது. பல்வேறுமாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், 2,673 (21.5%) பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. இதேபோல், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இரண்டாவது ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
2ஆ-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் பரவலாக 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் கரோனா தொற்று நிலை தொடர்பாக மாநில அளவில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதன்படி 30 ஆயிரம் பேருக்கு ரத்த சோதனை செய்யப்படும். எத்தனை பேருக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று கண்டறியப்படும். இதன்மூலம் கரோனா பாதிப்பின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். இம்மாத இறுதியில் இந்தஆய்வு தொடங்கப்படும்’’என்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து
70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் செப்.23 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணை யின் நீர்மட்டம் 95.27 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், அவற்றிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று (செப். 22) காலை விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (செப். 23) காலை விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் 91.45 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 3.82 அடி அதிகரித்து, இன்று காலை 95.27அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று அணையின் நீர் இருப்பு 54.32 டிஎம்சி ஆக இருந்த நிலையில், இன்று நீர் இருப்பு 58.5 8 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment