திருச்சி, செப்.27 திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக் கப்பட்டுள்ள பெரியார் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் சில நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
பெரியார் சிலை அவமதிக்கப் பட்டதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட் டத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் கழகத் தோழர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், பொது மக்களும் பெரும் திரளாகக் கூடி மறியலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
சிலை அவமதிப்பில் ஈடுபட்ட வர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
No comments:
Post a Comment