அமித் பாதுரி மற்றும் தீபங்கர் பாசு
(நாட்டின் பொருளாதார நிலையும் வளர்ச்சியும் சீர்குலைந்து போயிருப்பதற்குக் காரணங்கள், அரசு செய்யவேண்டியதை செய்யத் தவறியதும், செய்யக் கூடாத தவறுகளை செய்ததும்தான்)
இந்திய அரசின் புள்ளி விவர மற்றும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறை அமைச்சகம், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி யன்று வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2019 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உண்மையில் கிடைத்த டி.ஜி.பி யை விட, 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கிடைத்த உண்மையான ஜி.டி.பி. மிகப் பெரிய அள வில் 23.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. காலாண்டு ஜி.டி.பி. மதிப்பீடுகளை அரசு 1996 ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கியது முதல் இந்த அளவுக்கு ஜி.டி.பி. குறைந்து போயுள்ளது இதற்கு முன் எப் போதுமே நேராதது ஆகும். இது ஒரு பொருளாதாரப் பேரழிவு என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. இதனை விடப் பெரிய பேரழிவு இனிமேல் வர உள்ளதா? 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜி.டி.பி. குறைந்து போயி ருக்கும் உலகின் மிகப் பெரிய 13 பொருளாதார நாடு களில், இந்தியாவின் உண்மையான ஜி.டி.பி. மிகப் பெரிய அளவில் குறைந்து போயிருக்கிறது. இந்தக் காலத்தில் 3.2 விழுக்காடு ஆக்கபூர்வமான வளர்ச்சி யைக் கண்ட ஒரே நாடு சீனாதான். எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தின் சுருக் கத்துக்குக் காரணங்களாக, மத்திய அரசு செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தவறியதும், செய் யக் கூடாத செயல்களை செய்ததுமாகத்தான் இருக் கக் கூடும் என்று கருதப்படுகிறது.
குறைத்து மதிப்பிடப்பட்டதொரு பேரழிவு
இந்திய பொருளாதாரத்தில் அமைப்பு சாரா துறை ஒரு மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. 45 விழுக்காடு உற்பத்திக்கும், தொழிலாளர் மக்கள் தொகையில் 93 அளவிற்கும் அது பங்களிக்கிறது என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல புள்ளிவிவரங் களைத் தொகுக்கும் நடைமுறைகள் மேம்பாடு அடைந்து கொண்டே வந்திருக்கின்றன என்பதிலோ அல்லது அமைப்பு சாரா துறையிலே நம்பத்தகுந்த மதிப்பு கூட்டப்பட்ட மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டி ருப்பது சவால் அளிப்பதாக இருக்கிறது என்பதிலோ எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லை. குறிப்பிட்ட முறையில் எதிர்பார்த்தபடி, தொழில் துறை ஆய்வி லிருந்து, ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூட்டப்பட்ட மதிப்பு பற்றிய தகவலை, வேலை செய்பவர், வேலை இல்லாதவர் ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவலு டன், அரசு புள்ளி விவர நிபுணர்கள் இணைத்து, அமைப்பு சாரா துறையின் உற்பத்தித் திறன் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்குகின்றனர்.
எதிர்பார்த்தபடி, அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் துறை மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இந்த நடைமுறை, தரசோதனை தொடங் கப்பட்ட ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய தரசோதனை மதிப்பீடுகள் அந்த ஆண்டு களுக்கானவை மட்டுமே கைவசம் உள்ளன. தொழில் உற்பத்திக் குறியீடு, மொத்த வியாபார விலைக் குறி யீடு போன்ற மற்ற அடையாளங்கள் பற்றிய தகவ லைப் பயன்படுத்தி, தரவரிசை பிரிக்கப்படத் தொடங் கிய பிறகு பெறப்பட்டு கையில் இருக்கும் மதிப்பீடு களில் இருந்து அமைப்பு சாராத் துறையின் மற்ற ஆண்டுகளுக்கான உற்பத்தித் திறன் மதிப்பிடப்படு கிறது. நல்ல நாட்களிலும் கூட, இத்தகைய நடைமுறை மூலம் இவ்வாறு பெறப்படும் மதிப்பீடுகள், இயல் பாகவே, சந்தேகத்திற்கு இடமளிப்பவையாகவே இருக்கின்றன.
கோவிட்-19 தொற்று நோய் காரணமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஊரடங்கு சட்டத்தால் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி காரணமாக இத்தகைய மதிப்பீடுகள் தவறாக வழிநடத்த இயன்றவையாகவும், நம்புவதற்கு இயலாதவையாகவும் ஆகிவிட்டன.
இந்த ஊரடங்கு சட்டம் அமைப்பு சாரா துறைகள் மீது அளவுக்கு அதிகமாக மிகமிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக அமைப்பு சாரா துறை உற்பத்தித் திறனை மதிப்பீடு செய்வதற்கும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளா தாரத்தில் அதன் பங்களிப்பு பற்றி நிர்ணயிப்பதற்கு மான இந்த நடைமுறை, ஊரடங்கு காலத்தில் அதன் வருவாய் பற்றி அதிகமாக மதிப்பிட வழி வகுக்கிறது. கோவிட்-19 காலத்துக்கு முந்தைய ஆண்டுகளில் முறைசாரா துறையின் உற்பத்தித் திறன் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் வரிவசூல் தகவல்கள் அதிக அளவில் நம்ப இயலாத வையாக ஆகிவிட்டன.
இறுதிக் காலாண்டில் வேலை வாய்ப்பு நிலை சற்று வளர்ச்சி அடைந்துள்ளது என்று நமக்குக் கூறப் படுகிறது. ஆனால், இவர்கள் எல்லாம் தற்போது சந் தைக்கு வந்திருக்கும் சுயதொழில் முனைவோர்களே. நுகர்வோரின் வாங்கும் சக்தி கணிசமாகக் குறைந்தி ருப்பதால், அவர்களால் மிகக் குறைந்த அளவு வரு வாயையே ஈட்ட முடிகிறது. வேலை செய்யும் காலத்தை வைத்து அவர்களை தொழிலாளிகள் என்று கணக்கிட இயலுமேயன்றி, அவர்கள் ஈட்டும் வருவாயைக் கொண்டு அவர்களை வேலையற்ற வர்கள் என்றே கருத வேண்டும். முறை சாரா துறைக்கு நேரடியாக அரசு மிகமிக அதிக அள விலான வாங்கும் சக்தியை ஒதுக்காத வரை, வேலை வாய்ப்புக்கும், வருவாய்க்கும் இடையே உள்ள இந்த இடைவெளி வளர்ந்து கொண்டே போகும் என்றே தோன்றுகிறது.
விவசாயத் துறையால் உதவ முடியுமா?
உண்மையான ஜி.டி.பி. குறைந்து வந்துள்ள துறை வாரியான புள்ளி விவரங்கள் சில மிக முக்கியமான தகவல்களை அளிக்கின்றன. பெருமளவில் பொருளா தாரம் பாதிக்கப்பட்டு சுருங்கிப் போயிருக்கும் மூன்று துறைகள் கட்டுமானத் தொழில் (50 . 3 விழுக்காடு), வர்த்தகம், உணவு விடுதிகள், போக்குவரத்து, தகவல் ஒலிபரப்பு, (47 விழுக்காடு) உற்பத்தித் துறை (39.3 விழுக்காடு. முதல் இரண்டு துறைகளின் பெரும் பகுதிகள் முறை சாராத் துறையின் கீழ் வருகின்றன. விவசாயம் அல்லாத முறைசாரா துறையை ஊரடங்கு சட்டம் எவ்வளவு அதிக அளவில் மிகமிக மோசமாக பாதித்துள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டும்.
பொருளாதார சுருக்கம் ஏற்படாத ஒரே துறை விவசாயத் துறை மட்டும்தான். இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருந்தது என்பதுதான் அதன் காரணம். 2019 ஏப்ரல் - ஜூன் மாதத்தில் அது 3 . 4 விழுக்காடு அளவில் வளர்ச்சி அடைந்தது. அவ்வாறு இருந்தாலும், இப்போது நிலவி வரும் சூழ்நிலைகளில், விவசாயத் துறையின் வளர்ச்சி நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலை வளர்ச்சிக்கு உதவாது. விவசாயப் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு விவசாய வருவாய் உய ராது. விவசாயப் உற்பத்திப் பொருள்களை வாங்குவ தற்கு முறை சாரா துறைக்கு சக்தி இல்லாமல் இருப் பதே இதன் காரணம். உணவுப் பொருள்கள் மலை போல குவிந்து கிடக்கும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் தவிக்கும் மிகமிக மோசமான சூழலை மறுபடியும் ஒரு முறை நாம் சந்திக்கப் போகி றோமா?
மேலும் இருண்டதாகத்
தெரியும் எதிர் காலம்
இந்திய பொருளாதாரத்தின் துன்பங்கள் கோவிட்-19 தொற்று நோயினால் தொடங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே வந்திருக்கிறது. ஆண்டு வாரி யாக மாறி வரும் உண்மையான காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், 2017 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு முதல் 2017 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 7. 6 விழுக்காடாக இருந்த அது 2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 3 . 3 விழுக்காடு அளவில் குறைந்து கொண்டே வந்துள்ளது
மத்திய அரசு மேற்கொண்ட தவறான பொருளா தார நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளா தார நிலை பெரும் தீங்குக்கு உள்ளாகியுள்ளது. 2016 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் எதிர்மறை அதிர்ச்சியை அளித் தது. முதல் அதிர்ச்சியில் இருந்து நாடும் மக்களும் விடுபடும் முன்பாகவே, 2017 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டபோது இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டது. வங்கித் துறையில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள் இருந்த நிலையில், இவை அனைத்தும் இந்திய பொருளாதார நிலையை நொறுங்கிப் போகும் அளவுக்கு பலவீனமானதாக ஆக்கிவிட்டன. இதுவும் எதிர்மறை பொருளாதாரக் கொள்கைகள் தந்த அதிர்ச்சியும் சேர்ந்து, ஏற்கெனவே நோய் வாய்ப்பட்டி ருந்த இந்திய பொருளாதார நிலையை இந்த ஊர டங்கு கோமா நிலைக்குத் தள்ளி விட்டு விட்டது.
நமது சீரழிந்து போயுள்ள பொருளாதார நிலை விரைவானதொரு எதிர்காலத்தில் சரியாகி விடுமா? கோட்பாட்டின் படி கூறுவதானால் முடியும் என்றும், உண்மை நிலையைப் பார்க்கும்போது முடியாது என்றும் கூறவே தோன்றுகிறது. இதன் காரணம் என்ன? ஏழை மக்களின் பொருளாதார நெருக்கடி யைத் தீர்ப்பதில் நமது அரசுக்கு சிறிதும் ஆர்வமே இல்லை. நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு இருந்த போதிலும், விரல் விட்டு எண்ணக் கூடிய பிரதமரின் கோடீஸ்வர நண்பர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பமாக இருக்கிறது. உலகின் நான்காவது மிகப் பெரிய பணக் காரராக முகேஷ் அம்பானி ஆகிவிட்டார். விமான நிலையங்கள் மேம்பாட்டுத் திட்டங்களை மேற் கொண்டுள்ள அதானியும் மிகவும் மனநிறைவுடன் வளர்ந்து கொண்டே வருகிறார். நாட்டின் பொருளா தார நிலை 23.9 விழுக்காட்டிற்கு வீழ்ந்து விட்டது என்ற சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றி பேசி அவர்களது மகிழ்ச்சி நிறைந்த நிலையை எவரும் கெடுத்துவிடக் கூடாது.
இதைப் போன்ற நிகழ்வுகள் மேலும் மேலும் எதிர்காலத்தில் வர உள்ளன. ஆனால் நாட்டின் பொருளாதார நிலையை பலப்படுத்துவதற்கு அல்ல; தற்போது நிலவும் உண்மை நிலையை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவே எதிர்கால நிகழ்வுகள் வர உள்ளன. இறந்து போன புலம் பெயர்ந்த தொழி லாளர்களின் விவரங்கள் அரசிடம் இல்லை என்ப தால், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க இயலவில்லை என்று நாடாளுமன்றத்தில் அரசு இப்போது அறிவித்துள்ளது. இதை விட மிகப் பெரிய நெருக்கடி ஏதேனும் உருவாகிக் கொண்டிருக்கிறதா?
நன்றி: 'தி இந்து', 16-9-2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment