சென்னை, செப்.23 நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாக்களை அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் ஆதரித்தார். ஆனால் இந்த மசோதாவை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எதிர்த்து பேசினார்.
எனினும் விவசாய மசோதாவை வாக்கெடுப்பின் போது அவர் ஆதரித் தார். அதிமுகவின் இந்த இரட்டை நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து, மாநிலங்களவை அதி முக எம்.பி. எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் கூறியதாவது: இது இரட்டை நிலைபாடு இல்லை. அதாவது குறைந்தபட்ச ஆதார விலை என்பது மசோதாவில் தெளிவாக இல்லை. அதுபற்றி நான் கேள்வி கேட் டேன். குறைந்தபட்ச ஆதார விலையை நாங்கள் கொடுப்போம் என்றனர். அவ் வளவு தான். நான் பேசியதற்கு முதல்வர் என்னிடம் விளக்கம் கேட்க உள்ளதாக அவர் பேட்டி அளித்திருப்பதாக என் னிடம் கேட்கிறீர்கள். அதுபற்றி அவர் என்னிடம் கேட்டால் தான் நான் பதில் சொல்ல முடியும். நானாக ஏதாவது சொல்ல முடியாது. வரட்டும் அதன் பின்பு நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என கூறினார்.
No comments:
Post a Comment