ராமநாதபுரம், செப்.24 ராமநாத புரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் எரியூட்டல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த ஜெக நாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள் ளனர். கணவர் ஜெகநாதன் ராம நாதபுரம் அல்லிக்கண்மாய் சுடு காட்டில் மின்மயானத்தில் ஒப் பந்த அடிப்படையில் பிணங்களை எரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 2016ஆ-ம் ஆண்டு திடீ ரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் குடும்பத்தை காப் பாற்ற வழிதெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த ஜோதி தனது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மயான தொழிலை செய்ய துணிந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் பிணங்களை எரியூட்டல் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
இதுகுறித்து ஜோதி கூறிய தாவது:- எனது கணவர் இங்கு வேலை பார்த்தபோது அவருக்கு சாப்பாடு கொடுக்க வருவேன். அப்போது அவர் மயான வேலையை கற்றுக்கொடுத்தார். நான் இந்த தொழிலை செய்ய தொடங்கியதும் ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்தினர், உறவி னர்கள் இதனை ஏற்றுக் கொள் ளவில்லை. பின்னர் யாரிடமும் கை ஏந்தாமல் சொந்த காலில் நிற்பதை கண்டு ஏற்றுக் கொண்டனர்.
இரவு, பகல் பாராமல் இது வரை சுமார் 8 ஆயிரம் உடல்கள் வரை எரித்துள்ளேன். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விபத்து, தற்கொலை, அனாதைப் பிணம் போன்றவைதான். எனது இந்த வாழ்வில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.
மதுரையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிள்ளைகள் இறு தியிலும் எங்களின் பெற்றோர் இணைபிரியாமல் செல்ல வேண் டும் என்று கூறினர். அதனால் இருவரின் உடலையும் ஒரே சமயத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து எரியூட்டல் செய்தேன். இதுபோன்ற இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும். உடற்கூராய்வு செய்த உடல்களை இரவு நேரங் களில் கொண்டுவந்து கொடுப் பார்கள். விடிய விடிய தனி ஆளாக சில நேரங்களில் மின்சாரம் இல் லாமல் செல்போன் வெளிச்சத்தில் எரியூட்ட வேண்டி இருக்கும்.
இந்த சுடுகாட்டினை நான் கோவிலாகத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் வறுமையில் இருந்த போது இந்த தொழில் செய்வதால் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போது என்னை ஏற் றுக்கொண்டு அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மயான வேலையை ஆண்களே சவாலாக நினைக்கும் இந்த காலத்தில், குடும்பத்தை காப்பாற்ற ஜோதி இந்த வேலையை ஏற்றுக் கொண்டிருப்பது அவரை துணிச் சல் மிக்க புதுமைப் பெண்ணாக தெரிய வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment