டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
நீட் 2020 தேர்வில் 4 அல்லது 5 கேள்விகளுக்கு தவறான விடைகளை தந்துள்ளதாக தேசிய தேர்வு முகமைக்கு, மாணவர்களும், பெற்றோர்களும் புகார் எழுப்பியுள்ளனர். இது குறித்து மனு அனுப்பு வதற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இணையம் வழியே கட்டணம் அனுப்புவதிலும் தடை ஏற்படுகிறது என்றும் புகார் சொல்லப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில், உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சக்தி பார்ட்டி, மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது கூட்டணியாக போட்டியிட முடிவு செய்து உள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
கடந்த அய்ந்து ஆண்டுகளில், ரூ.1000 கோடி சொத்து வைத் துள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள் ளது என அய்.அய்.எப்.எல். ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.6,68,400 கோடியாக உயர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்: பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியது, பாஜகவை அதிகம் பாதிக்காது. தனித்த கட்சியாக தான் நினைத்ததை செயல்படுத்த இதை ஒரு வாய்ப்பாக பாஜக பயன்படுத்தும் என மூத்த எழுத்தாளர் சுகார் பக்ஷிகார் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சி தத்துவம், இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டிற்கு மிக, மிக தேவையான ஒன்று. மத்திய மாநில உறவுகளில் மறு ஆய்வு செய்து, இன்னமும் மேம்பாடும் நம்பகத் தன்மையும் இருக்க வேண்டும் என 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார செயல்பாடு ஏனைய உலக நாடுகளை விட மிக மோசமாக உள்ளது. அரசின் பொருளாதார ஊக்குவிப்பு போதுமானவை அல்ல என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்
.
தி இந்து:
கரோனா பரவல் அடங்கியபின், குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் டில்லி சாஹீன் பாக்கில் தொடரும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை அரசு விடுதலை செய்திட வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூத்த பெண்மணி பில்கிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை இவரது படத்தை முகப்பில் வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்டி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இன்னமும் எவ்வளவு காலத்திற்கு அவரை சிறையில் வைப்பீர்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தி டெலிகிராப்:
பிரதமர் மோடி வேறு எது குறித்தும் கோபப்படவில்லை. ஆனால், டில்லியில் ராஜ்காட் பகுதியில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் ஒன்றை கொளுத்தியதற்கு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் என செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, பல்கலைக்கழகங்கள், அய்.அய்.டி.க்களில் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் காலியிடங்களை நிரப்ப வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உயர்ஜாதி யில் பொருளா தாரத்தில் பின் தங்கியோர்க்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங் களை நிரப்பிய நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மேலும் சிக்கலை உருவாக்கும்.
- குடந்தை கருணா
30.9.2020
No comments:
Post a Comment