மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாததற்குக் காரணம் என்ன?
மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரி வினர்க்கு இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்:
மருத்துவப் படிப்பில் மாநிலங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் இடங்களில் ஓபிசி பிரி வினர்க்கு இட ஒதுக்கீடு வழங்கிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? 50 சதவீத இடங்கள் அளித்திட வகை செய்யும் குழு அமைக்கப்பட்டதா? ஆம் எனில் அரசின் நடவடிக்கை என்ன? மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர் களுக்கு 2013 முதல் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததற்குக் கார ணம் என்ன? நடப்பு கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு அளித்திட அரசு முடிவெடுத்துள்ளதா? தமிழக அரசிடம் இருந்து இது குறித்து ஏதேனும் தாக்கீது வந்ததா? ஆம் எனில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று நாடாளுமன்ற திமுக குழுவின் தலைவர் டி.ஆர். பாலு எழுத்துப் பூர்வமான கேள்வி எழுப்பினார்.
இதற்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவ்பே அளித்த பதிலில், சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசின் சுகாதாரத்துறை, தமிழக அரசின் சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகிய துறைகளின் செயலாளர்கள் கொண்ட குழுவை 7.9.2020 அன்று மத்திய அரசு அமைத்துள்ளது.
உச்சநீதிமன்றம் (தினேஷ் குமார் மற்றும் பிறர் Vs. மோட் டிலால் நேரு மருத்துவக் கல்லூரி, அலகாபாத்) அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தின்படி, 1987 ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. மேலும், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர்கள்சேர்க்கை - இடஒதுக்கீடு) சட்டம் 2006 இன் விதிகளின் கீழ், ஓபிசி பிரிவினர்க்கு 27% இட ஒதுக்கீடு 2009 ஆம் ஆண்டு முதல் நாட்டின் மத்திய கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது.
2015 இல் சலோனி குமாரி எதிர் டி.ஜி.எச்.எஸ். (சுகாதாரத்துறை) தொடர்ந்த வழக்கில், அகில இந்திய ஒதுக்கீடு யுஜி / பிஜி மருத்துவ இருக்கைகளில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, 2016 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் அரசு ஒரு செயலூக்கமான நிலைப்பாட்டை எடுத்தது, அதன் படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்களுக்கு மாநிலங்களில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த பரிந்துரைத் துள்ளது என அமைச்சர் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment