தனது பலவீனத்தை மறைக்க 'கடவுள் - மக்களை'க்காட்டி குறை கூறுவதா : ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

தனது பலவீனத்தை மறைக்க 'கடவுள் - மக்களை'க்காட்டி குறை கூறுவதா : ராகுல் காந்தி


புதுடில்லி செப் 24 அரசு சில நேரங்களில் கடவுளை, சில நேரங்களில் மக்களை குற்றச்சாட் டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு உதவக் கூடியவை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கானவை, அவர்களின் வருவாயை அதிகப் படுத்தும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.


மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, வரம்பு மீறிச் செயல்பட்ட தாகக் கூறி 8 உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார். 8 உறுப்பினர்களை மீதான நடவ டிக்கையை ரத்து செய்யும் வரை யாரும் அவைக்குள் செல்லமாட் டோம் என எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்துள்ளன.


இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திசுட்டுரையில் இந்தியில் பதிவிட்ட கருத்தில், “2014ஆ-ம் ஆண்டு தேர்தலின்போது, அளித்த தேர் தல் வாக்குறுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வோம் என்று மோடி பேசினார்.


ஆனால், 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில், சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க முடியாது என்று மோடி அரசு தெரிவித்தது. 2020-ஆம் ஆண்டு கறுப்பு வேளாண்மைச் சட்டங்கள் வந்துள்ளன.


மோடியின் உள்நோக்கம் தெளிவாக இருக்கிறது. அவர் தன்னுடைய புதிய வேளாண் பரிசோதனையைத் தொடங்கி விட்டார். தன்னுடைய பெருமுத லாளி நண்பர்களின் வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு விலை கொடுக் கிறார். அவர்களுக்காகவே பணி யாற்றி வருகிறது மோடி அரசு" என்று தெரிவிதித்துள்ளார்.


No comments:

Post a Comment