ஜெனீவா,செப்.2, கரோனா நெருக்கடி காரணமாக ஆண்--_ பெண் பாகுபாட்டை ஒழிப்பதில் காணப் பட்ட முன்னேற்றம் பின்னடைவைச் சந்தித்து வருவதாக அய்.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, காணொலி முறையில் கடந்த 31.8.2020 அன்று நடைபெற்ற சமூக அமைப்புகளைச் சேர்ந்த இளம் பெண்களின் கூட்டத்தில் அய்.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவ லால் ஏற்பட்ட நெருக்கடி காரண மாக, ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான பாலின பாகுபாடு மேலும் அதிகரித்து வருகிறது.பாலின சமநிலை மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகள் போராடி பெற்ற முன்னேற்றங்களுக்கு கரோனா நெருக்கடி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகா ரத்தை அக்கறையுடன் அணுகி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால், பல தலைமுறைகளாகப் போராடி பெற்ற பலன்களை நாம் இழக்க நேரிடும்.கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அந்த நோய்க்கு எதிரான போராட்டத் தில் பெண்கள் முன்னணியில் நிற்கின் றனர். மருத்துவப் பணியாளர்களாக, ஆசிரியைகளாக, அத்தியாவசியப் பணியாளர்களாக, வீடுகளைப் பரா மரிப்பவர்களாக பல அவதாரங்களை எடுத்து கரோனா பாதிப்புகளை எதிர்த்து அவர்கள் போராடி வரு கின்றனர். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 90 சதவீதம் வரையிலானவர்கள் பெண்கள் தான். ஆனால், முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர்களில் 30 சதவீதம் பேருக்குமேல் இருப்ப தில்லை.இந்த இக்கட்டான காலக் கட்டத்தில் அனைவரது உடல் நலம், மன நலம், கல்வி உள்ளிட்டவை பாதிக்கப் பட்டுள்ளன.
தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பதின்ம வயதுடய பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் விளைவாக, சில நாடுகளில் அந்த வயதுப் பெண்கள் கர்ப்பமடையும் அபாயம் இதுவரை இல்லாத அள வுக்கு அதிகரித்துள்ளது.அதுமட்டு மன்றி, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் அதிக ரித்து வருகிறது. கரோனா நெருக்கடி காரணமாக துன்புறுத்தும் நபர் களுடனேயே பெண்கள் அதிக நேரம் தங்கியிருக்க வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர் களைப் பாதுகாப்பதற்குத் தேவை யான கட்டமைப்பு வசதிகள் கரோனா தடுப்புப் பணிகளுக்காக திருப்பி விடப்பட்டுள்ளது, இந்த நிலைமையை மேலும் மோசமாக்கி யுள்ளது. பாலின சமத்துவம் கரோனா நெருக்கடிக்கு முன்பிருந்த நிலையை அடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அன்டோ னியோ குட்டெரெஸ்.
No comments:
Post a Comment