ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 3, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல்,


அய்தராபாத்:



  • செப்டம்பர் 14-ஆம் தேதி துவங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மாநிலங்களவை செயலகம் அறிவித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

  • ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து விலகி, நிதிஸ்குமார் தலைமையிலான கூட் டணியில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி சேர்ந்துள்ளார்.

  • காஷ்மீரில் இதுவரை அலுவல் மொழி யாக உருது, ஆங்கிலம் இருந்து வந்த நிலை யில், ஹிந்தி, காஷ்மீரி, தோக்ரி ஆகிய மொழிகளையும் அலுவல் மொழியாக மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் :



  • முக நூல் நிறுவனம் ஆளும் பாஜக விற்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறிய நிலையில், பாஜக வின் சார்பிலும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கண்டறிய உரிய விசாரணை மேற்கொள்வது சரியாக இருக்கும் என தலையங்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தி டெலிகிராப்:



  • பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாற்றில் இதுவரை காணாத அளவு ஜிடிபி -23.9 சரிவு, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை அதிகரிப்பு, உலகிலேயே அதிக அளவு கரோனா தொற்று அதிகரிப்பு, உயிரிழப்பு, பன்னிரெண்டு கோடி வேலையிழப்பு, மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கியை தர மறுப்பு என எந்தெந்த துறைகளில் பாதிப்பு என் பதையும் பட்டியிலிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட் டுள்ளார்.

  • அய்.அய்.டி போன்ற பொறியியல் படிப்புக்கான ஜீ (JEE) தேர்வில் மேற்கு வங்க மா நிலத்தில் 75 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு நடத்தியே தீர வேண்டும் என மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது ஏன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸ்:



  • மாணவர்களின் நலனை புதிய கல்விக் கொள்கை முற்றாக புறக்கணிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி இணை செயலாளர் ருசி குப்தா தனது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.


- குடந்தை கருணா


3.9.2020


No comments:

Post a Comment