காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேட்டி
புதுதில்லி, செப்.27 மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி வருகின் றனர்.இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது, குறைந்தபட்ச ஆதார விலையை அழித்துவிடும், கார்ப்பரேட்டுகளிடம் தங் களை அடிமைகளாக்கிவிடும் எனகுற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் அரச மைப்புச் சட்டத்திற்கே எதிரானவை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் கூறியிருப்பதாவது: வேளாண் மசோதாக்களுக்கு கையொப்பம் இடவேண்டாம் என ஒத்தக் கருத்துக் கொண்ட 18 எதிர்க்கட்சிகள் சேர்ந்து குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளோம். இந்தமசோதா சட்டமானால், அது கூட்டாட்சி அமைப்புக்கே விரோ தமாகி விடும் என்று தெரிவித் துள்ளோம். அவரும் கையொப்ப மிடமாட்டார் என நம்புகிறோம். ஒருவேளை குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டால், அந்தசட்டங்களை எதிர்த்து, உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நாங்கள் செல்வோம். சட்டப்போராட்டம் நடத்துவோம். அரசமைப்புச் சட்டத்தின் 7ஆ-வது பட்டியலில் 2-ஆவது பிரிவுஎன்பது மாநிலங்களின் முழுமையான உரிமையைக் குறிக்கிறது.அதன்படி, வேளாண்மை 2-ஆவது பிரிவில் இருக்கிறது. இந்த சட்டம் நேரடி யாக, மாநிலங்களுக் குள் நடக்கும் வேளாண் வர்த்தகம், வியாபாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. சந்தைகள் நடத்துவது, பராமரிப்பது என்பதுமாநில அரசின் கீழ் வரும். எனவே, மத்திய அரசு செய்துள்ளது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோத மானது. அதேபோல மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவையில் ஒரு உறுப்பினர் மனு அளித்தால்கூட, அதை அவைத் தலைவர் பரிசீலிக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவையில் அது அங்கு நடக்கவில்லை. குரல் வாக் கெடுப்பின் மூலம் இந்த கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு நிறை வேற்றியுள்ளது. இவ்வாறு அபி ஷேக் சிங்வி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment