சங்கிகளின் ஒழுக்கம்?
கோவை,செப்.2, கோவை அருகே காரமடையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பல்சர் வாகனத்தைச் சோதனை செய்ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர்.
உடனே அந்த வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு முன் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அவர்கள் என காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த ஜூன் மாதத்தில் காரமடை அருகே உள்ள கெம்பனூர் கிராமத்தில் அனிதா என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, தங்கத் தாலி, தங்க வளையல், தங்கக் கம்மல் போன்றவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும், ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவலும் வெளிவந்தது. அதோடு இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்ற போன்ற குற்றச்சம்பவங்கள் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment