தி.லஜபதி ராய்
நேற்றையத் தொடர்ச்சி...
28.08.2017லிருந்து 01.10.2018 வரையிலான உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிகாலம் பலமுரண்களை கொண்டது.
நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலத்தில் 1.8.2017 அன்று பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இந்திய மருத்துவ குழு பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
24.08.2017ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் பிரசாத் கல்வி அறக்கட்டளையின் தங்களது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தர விட்டார். இந்திய மருத்துவ குழுவின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் வழக்கில் ஒரு வழக்கை மட்டும் தனியாகப் பிரித்து அனுப்பியது வழக்கத்திற்கு மாறானது.
பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் லஞ்சம்
மாணவர்கள் சேர்க்கை தொடங்கும்படி பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்திய மருத்துவ குழு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் மறுபடியும் பிரசாத் கல்விக் அறக்கட்டளைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகும்வாய்ப்பு தரப்பட்டது. பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் சி.பி.அய். பதிவு செய்த நீதிபதிகள் லஞ்சம் வழங்கியது தொடர் பான முதல் தகவல் அறிக்கையில் திரு.யாதவ் என்பவர் ஓடிசாவை சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குதுசி, மற்றும் பவனா பாண்டே என்பவர்களை தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மீரட்டிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியின் சுதுர்கிரி என்பவர் மூலமாக இது தொடர்பான சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.
பதவி நீக்கம் செய்ய பரிந்துரை
19.09.2017 ஆம் ஆண்டு குற்றச்சதி மூலம் லக்னோவின் பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தொடர்பு பற்றி விசாரிக்க திருமிகு காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்து தள்ளுபடி செய்தது, சட்ட நீதிகளுக்கும், நியாயத்திற் கும் புறம்பானது எனவும், சி.பி.அய். பதிவு செய்த உரையாடல்களில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் பிரசாத் அறக்கட்டளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அய்ந்து நீதிபதிகளின் அமர்வில் அமர்ந்த நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்ச பணத்தை யும் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்த உரையாடல் நடந்ததையும் பூசன் சுட்டிக்காட்டினார். பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் அலகா பாத் நீதிபதி சுக்லா என்பவர் இடைக்கால தடை உத்தரவு வழங்க பணம் பெற்றது தெள்ளத் தெளிவாக தெரிந்த பிறகும் அவர் மீது வழக்கு பதிய உச்சநீதி மன்ற உள்ளரங்க நடவடிக்கை மூலம் மறுத்த தீபக் மிஸ்ரா நீதிபதி சுக்லாவை நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. 17.07.2020வில் நீதிபதி சுக்லா ஒய்வு பெற்றார்.
ஜனவரி 2018இல் நான்கு முதுநிலை நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் லோகூர்;, ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதி தீபக் மிஸ்ரா வின் சர்வதிகார போக்கை கண்டித்தும், மிக முக்கிய வழக்குகளை அவரே கையாளுவதைப் பற்றியும், குறிப்பிட்ட சில அமர்வு நீதிபதிகளின் அமர்வில் மட்டுமே அவற்றை ஒப்படைப்பது குறித்தும், மருத்துவ ஊழல், நீதிபதி லோயா இறப்பிற்கான புலன் விசாரணை வழக்கு, ஆதார் வழக்கு, நீதிபதிகள் நியமன தொடர்பான வழக்கு போன்ற வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் பூசன் அதிருப்தி தெரிவித்தார்.
சமூக போராளிகளுக்கு பிணை வழங்க மறுப்பு
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது பீமா கொரேகாவ்ன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக போராளிகள் மீது புனே காவல்துறையால் புனையப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விற்கு மாற்றம் செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம், மகராட்ராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தவுடன் தானகவே முன்வந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையும் பின்னர் சமூக போராளி களும், அறவழியில் நம்பிக்கைடையவர்களுக்கும், பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் பதவிக் காலத்தில் அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வழக்கு, ரபேல் வழக்கு, சி.பி.அய். இயக்குநர் வழக்கு போன்ற வற்றை அவர் கையாண்ட விதம் குறித்து பூசன் கவலை தெரிவித்தார். அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடுகள் தொடர்பாக நீதிபதி கோகாய் கையாண்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ் வித பரிகாரம் பெற முடியாத சூழல் ஏற்படும் விதத் தில் நீதிமன்றமே குடியுரிமை பதிவேட்டு நடவடிக் கைகளை மேற்பார்வை செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நீதி பெறுவது தொடர்பான வழக்கு அனைத்து கட்சி களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங் களை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் பெற்று அதன் அடிப்படையில் அவ்வழக்கை கையாண்ட முறை குறித்தும் பூசன் கவலை தெரிவித்தார். தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு மத்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தும், விதிகள் வளைக்கப்பட்டு 95 விழுக்காடு தேர்தல் பத்திரங்கள் ஆளுங்கட்சி மட்டுமே பெற்றதையும் பூஷன் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீரில் ஒரு வருட முழு அடைப்பு நிகழ்ந்த தையும் உறுப்பு 370 நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீர் மூன்றாக துண்டாப்பட்டதையும், அதன் மூலம் அமைதி திரும்பும் என்ற அரசின் வாதம் காஷ்மீரில் 4ஜி அலைக்கற்றையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வழக்கில் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்றும் அரசு முரண்பாடாக வாதம் செய்ததையும் பூஷன் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீர் தொடர்பான ஆட்கொணர்வு நீதிப் போராணைகளில் மெத்தன போக்கை உச்சநீதிமன் றம் கடைப்பிடித்ததையும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கில் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப்தாரிகமி தாமதமாக விடுதலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட் டினார்.
சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு
பாமர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக அவ்வழக்கை விசாரித்து, நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தி உச்சநீதி மன்ற உத்தரவிற்கு எதிராக பாபர் மசூதியை இடித் தமை சட்ட விரோதம் என தங்கள் 09.11.2019ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அளித்த தீர்ப்பின் மூலம் சட்ட விரோத மசூதி இடிப்பை நியாயப்படுத்தியதுடன் அது சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு எனவும் பூசன் குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பெயர் குறிப்பிடாததையும் சட்ட விரோதமான பின்னினைப்பு ஒன்றை 116 பக்கங்கள் வழங்கியதும் கேள்விக்குரியது எனவும், ஒருமித்த ஆனால் ஒளிந்து கொள்ளும் தீர்ப்பு unanimous but anonymous என நீதிபதி ஏ.பி.ஷா எழுதிய கட்டுரையும் அவர் குறிப் பிட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை
நீதிபதி கோகாய் இளநிலை நீதிமன்ற உதவியாளர் ஒருவரை பாலியல் தொந்தரவு புரிந்தாக குற்றம் சாட் டியவுடன், அவர் மூன்று முறை பணிமாற்றம் செய் யப்பட்டு இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதை யும், டில்லி காவல்துறையில் பணிபுரிந்த அப்பெண் மணியின் கணவரும், மைத்துனரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்பெண்மணியின் மாற்றுதிறனாளியான இன்னொரு மைத்துனர் நிரந் தர பணிநீக்கம் செய்யப்பட்டதையும் பூசன் சுட்டிக் காட்டினார் அப்பெண்மணி தாக்கல் செய்த உறுதி மொழி தாள் குறித்த வழக்கில் நீதிபதி கோகாய் தன் மீதான வழக்கைத் தானே அமர்ந்து முடிவு செய்தது அடிப்படை சட்டக்கருத்தான ‘தனது வழக் கில் தானே தீர்ப்பளிக்க கூடாது’ என்ற சட்ட மீறல் எனவும், பூஷன் குறிப்பிட்டார். பாலியல் தொந்தரவு வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் நீதிபதிகள் அரவிந்த போப்டே, இந்து மல்ஹோத்ரா, மற்றும் இந்திராபானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்குரைஞர் முன் னிலையாக அனுமதிக்காததால் புகார் கொடுத்த பெண்மணி அக்குழுவின் முன் முன்னிலையாக விரும்பாததையும் பூசன் குறிப்பிட்டார். நீதிபதி கோகாய் மீதான குற்றச்சாட்டு மூன்று நீதிபதிகள் குழுவினால் முடித்துவைக்கப்பட்டாலும் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை என்ப தையும், அப்பெண்மணி மறுபடியும் பணி அமர்த்தப் பட்டதையும், அவர்களது மைத்துனர்களுக்கு பணி வழங்கப்பட்டன எனவும். ஆனால் கோகாய் விவ காரம் திரை மூடிய மர்மமாகவே இன்றும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
நீதிபதி கோகாய் தலைமையிலான கொலிஜியம் என்ற முதுநிலை நீதிபதி குழு குஜராத் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அகில் குரேசி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பரிந்து ரைத்து, இறுதியில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்கப்பட்டதையும் பூசன் குறிப்பிட்டார்.
நீதிபதியும் அரசும்
கைகோத்துக் கொண்டன
ஓய்வு பெற்ற நான்கு மாதங்களில் நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்ற தையும், சாமானிய மனிதர்களுக்கு நீதித்தறை அமைப்பின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போன தையும் ‘உதவிக்கு பதவி’ என்ற அடிப்படையில் நீதிபதியும், அரசும் கைகோத்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி போப்டே அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளில் மக்களைக் காப்பாற்றத் தவறியதையும், டில்லி கலவரத்தில்
டில்லி எரிந்த போது நீதிபதி முரளிதரன் அவர்கள் 26.02.2020 முதல் தகவல் அறிக்கை பதிய உத்தர விட்டதையும் அன்று நள்ளிரவே அவர் மாற்றம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் . இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு, காஷ்மீர் வழக்கு 4ஜி அலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதியின் போப்டே அவர்களின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை என பூஷன் சுட்டிக்காட்டினார்.
ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டது
இது தவிர ஏராளமான தரவுகளை தான் தர முடியும் எனவும்,மேற்சொன்ன நிகழ்வுகளின் அடிப் படையிலேயே தான் கடந்த ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டதையும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் பங்கு குறித்தும் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டதாகவும்,அவ்வாறு கூற அரசியலமைப்பு சட்டம் 19(1)(ஏ)யின் படி அவருக்கு உரிமையுள்ளது எனவும், நான் ஆகஸ்ட் மாதம் 2 நாள் 2020இல் உறுதி மொழி வாக்குமூலத்தை அளித் தார் .
மேற்சொன்ன உறுதிமொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் பூசனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல வழக்கு களில் பல அரசியல்கட்சிகள் நீர்த்து போன கருத்து களை கூறி வந்த சூழலில் பூசனின் உச்சநீதிமன்ற வாக்குமூலம் மகிழ்ச்சி அளிக்கிறது.
- முகநூலிலிருந்து...
பின்குறிப்பு: உதவிய சீனி,புஷ்பவல்லி, நர்கிஷ் ஆகியோருக்கு நன்றி.!
No comments:
Post a Comment