காஞ்சி காமாட்சி கோவிலில்...
காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் குருக்கள் நாகராஜன் இரண்டு மாதங்களுக்குமுன் இறந்தார். அந்தக் குருக்கள் பணிக்குத் தன்னை அமர்த்தும்படி அவரது மகன் ஹரி கோவில் செயல் அலுவலர் சரவணனைக் கேட்டார். ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்த சரவணனிடம் பணத்தைக் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும், களவுமாகப் பிடிக்கப்பட்டார்.
அர்ச்சகர் பணி நியமனம் இப்படித்தானா?
அம்மணமான மடாதிபதி!
கருநாடகம் - சவுரிபிதன் மடாதிபதி பாரதி சுவாமி காரில் பயணம் செய்தபோது, தேசிய சுங்கச்சாவடியில் அவர் காரை நிறுத்தி கட்டணம் கேட்டபோது, மடாதிபதியின் காருக்கே சுங்கக் கட்டணமா என்று கேட்டார். பிரச்சினை வெடித்தபோது - மடாதிபதி என்ன செய்தார் தெரியுமா? தன் ஆடைகளைக் களைந்து அம்மணமாக நின்று போராடினார் - மடத்தனமாக மடாதிபதி!
மடம் என்றாலே அம்மண விடயங்கள் சர்வசாதாரணம் தானே!
நடிகர்கள் - பைத்தியமா?
தெலங்கானாவில் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாள் விழாவை நள்ளிரவில் கொண்டாடிய ரசிகர்கள் மூவர் பேனர் விழுந்து அந்த இடத்திலேயே மரணம். நள்ளிரவில் நடிகரின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 5 ரசிகர்கள் சாலை விபத்தில் மரணம்!
நடிகர்கள்மீதான பைத்தியம் இப்பொழுது தமிழ்நாட்டையும் கடந்து பயணிக்கிறதோ!
கேள்வி - நேரம் கிடையாது
வரும் 14 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது.
ஆமாம் - கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டுமே! அந்தப் பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளது பா.ஜ.க. ஆட்சி.
சி(சு)த்த வைத்தியம்!
தகுதியான சித்த மருத்துவர்கள் ஏராளம் இருந்தும் அவர்களை ஏன் நியமனம் செய்யவில்லை? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
சித்த வைத்தியத்தில் தேர்ந்தவர்கள் பெரும்பாலும் 'பஞ்சம', 'சூத்திர'வாளாச்சே!
கிடையாது
'பி.எம்.கேர்ஸ்' நிதி அய்ந்தே நாளில் ரூ.3076 கோடி திரண்டது. - பத்திரிகை செய்தி!
பரவாயில்லையே, இந்தத் தகவலாவது வெளியில் வந்ததே!
இன்னும் இருக்கிறதே!
''மோடி உருவாக்கிய பேரழிவு - ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவிகிதம். 12 கோடி பேர் வேலை இழப்பு'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இது என்ன, இன்னும் இருக்கிறது. எதிர்காலத்தில்... 'எல்லாம் கடவுள் செயல்' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அருள்வாக்கு!
No comments:
Post a Comment