நடவடிக்கை உண்டா?
சென்னை, செப்.2 சில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலை தளங் களில் வைரலானது.
மேலும் சிவனடியார் சரவணன் குடும்பத் தினரும் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து அந்த ஊருக்கு சென்ற ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி னார்கள்.
ஆனால் சாமியாரின் ஊர் மக்கள் சாமியார் வெளியிட்ட வீடியோ பொய் எனக் கூறி அவர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவேசமான அனுமன் சேனா அமைப்பின் தலைவர் சிறீதரன் என்பவர் நான் தமிழ்நாடு முழுக்க சுற்றியவன். என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார். அந்த அளவு செய்தவன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
No comments:
Post a Comment