இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல் நலக் குறைவால் டில்லி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (31.8.2020) மாலை காலமானார் என்ற செய்தி வருந்தத்தக்க செய்தியாகும்!
மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் வகித்து பிறகு குடியரசுத் தலைவரானவர் பிரணாப் முகர்ஜி. அவரது இழப்பு காரணமாக இந்தியப் பொது வாழ்வு ஒரு பெரும் அரசியல் இராஜ தந்திரியை இழந்திருக்கின்றது என்பது உண்மை. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்க்கு நமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்.
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
1.9.2020
No comments:
Post a Comment