- ஹிமான்ஷூ
(அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய சீர்திருத்த சட்டங்கள் எதிர்க்கப்படுவதற்கு,போதுமான நியாயமான காரணங்கள் உள்ளன. விவசாயிகளின் உண்மையான கவலைகளின்mஒரு பிரதிபலிப்பாக அந்த எதிர்ப்பு இருக்கக் கூடும்.)
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயம் தொடர்பான மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவ தாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். எதிர்க் கட்சியினர் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை அண்மையில்தான் மேற்கொண்டார்கள் என்ற போதி லும், கடந்த ஜூன் மாதத்தில் இந்த மசோதாக்களுக் கான அவசர சட்டங்கள் பிரகடனம் செய்யப்பட்ட அன்று முதற்கொண்டு விவசாயிகள் இந்த மசோதாக் களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. விவசாய உற்பத்திப் பொருள் வியாபாரம் மற்றும் வணிகத்தை (வசதிகள் செய்து மேம்படுத்தும் சட்டம், விவசாயிகளுக்கு அதிக அதி காரம் அளித்து பாதுகாப்பதற்கானசட்டம் விலை உறுதிப்பாடு மற்றும் விவசாயிகள் சேவை ஒப்பந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் (திருத்த) சட் டம், 2020 என்பவையே இந்த சட்டங்கள். சிரோன் மணி அகாலி தள நாடாளுமன்ற உறுப்பினரும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான மத்திய அமைச்சரு மான ஹரிசிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர வையில் இருந்து விலகியதுடன், ராஷ்ரிய சுயம் சேவக் அமைப்பின், வெகுஜன ஆதரவு பெற்ற பல் வேறுபட்ட துணை அமைப்புகளிலிருந்து, இந்த சட் டங்கள் பற்றி எழுந்துள்ள கருத்து மாறுபட்ட குரல் கள், இந்த சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்று காட்டுகிறது. அதற்கு மாறாக, விவசாயிகளின் உண்மையான கவலைகளை பிரதிபலிப்பதாக அது இருக்கக் கூடும்.
சுருங்கக் கூறினால், விவசாய உற்பத்திப் பொருள் கள் சந்தைக் குழுக்கள் கட்டமைப்புக்கு வெளியே தரகர்கள் அற்ற வியாபார மய்யங்களை உருவாக்குவ தன் மூலம் விவசாய உற்பத்திப் பொருள் வியாபாரத் தில் உள்ள அரசின் குறுக்கீடுகளை நீக்குவதும், விவ சாய உற்பத்திப் பொருள்களை தனியார் இருப்பு வைத்திருப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதும் இந்த மசோதாக்களின் நோக்கம். இந்த சந்தைக் குழுக்களை சீர்திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது ஒன்றும் புதியது அல்ல. கடந்த 20 ஆண்டு காலம் ஆட்சிக்கு வந்த அரசுக ளின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அது இருந்து வந்ததுதான். மிகைப்பட்ட அரசியல் குறுக்கீடு இருக் கிறது என்பதையும் மண்டிகள் செயல்பாடுகள் பற்றி சீர்திருத்தங்கள் செய்வது தேவை என்பதையும் பெரும்பாலான விவசாயிகள் அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன.
எவருடனும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அள வில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறுபட்ட சீர்திருத் தங்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். என்றா லும், இந்த குறிப்பிட்ட வழக்கில் இருப்பது சட்டங்கள் பற்றிய பிரச்சினை அல்ல. அவற்றை அறிமுகப் படுத்திய நடைமுறையில்தான் பிரச்சினை உள்ளது. திருமதி பாதல் சுட்டிக் காட்டியபடி, விவசாயிகள் மற்றும் தரகர் உள்ளிட்ட இந்த பிரச்சினையில் தொடர்புடைய அனைவருடனும் எந்த வித கலந் தாலோசனையும் விவாதமும் மேற்கொள்ளப்பட வில்லை. மாநில அரசுகளை இது பற்றி கலந்தாலோ சிப்பது என்று வரும்போது, வர்த்தகமும், விவசாயமும் அரசமைப்பு சட்ட பொருள்கள் அட்டவணையில் மாநிலங்களுக்கான பொருள்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த போதிலும், மாநில அரசுகளுடனும் எந்த வித கலந்தாலோசனையும் மேற்கொள்ளப்பட வில்லை. முறையான கலந்தாலோசனை இன்றி இந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப் பட்ட முயற்சி, மாநில அரசுகள் உள்ளிட்ட விவசாயத் துறை தொடர்பானவர்களிடையேயும் மத்திய அரசின் நோக்கத்தைப் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளிடையே இது அவநம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது என்பதுடன், விவசாய அமைப்புகளால் எழுப்பப்பட்டுள்ள சில பிரச்சினைகளும் உண்மை யானவையே. விவசாய உற்பத்திப் பொருள் விலை களில் அண்மையில் நிலவி வரும் போக்குகளும், வருவாய்களும் இத்தகைய அச்சங்களை உறுதிப் படுத்தவே செய்கின்றன.
விவசாயத் துறையை கார்ப்பரேட் துறையாக மாற் றுவது, விவசாயத் துறைக்கு தந்து வந்த அரசு ஆத ரவை திரும்பப் பெற்றுக் கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட, ஓர் அகண்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்தகைய சட்டங்களை விவசாய அமைப்புகள் பார்க்கும்போது, தற்போதுள்ள உட னடியான கவலை, சந்தைக் குழுக்களின் மண்டிகளை பலவீனப்படுத்துவதுடன், அதனைத் தொடர்ந்து அரசினால் உறுதி அளிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அளிக்கப்பட்டு வரும் குறைந்த அளவு ஆதரவு விலையை அரசு விலக்கிக் கொள்ளும் என்பதுதான். உறுதி அளிக்கப்பட்ட குறைந்த அளவு விலையில் விவசாய உற்பத்திப் பொருள்களை அரசு கொள்முதல் செய்யும் நடை முறை கைவிடப்படும் என்பதல்ல இந்த சட்டங்களின் பொருள் என்று அரசு விளக்கம் அளித்த போதிலும், அரசின் உண்மையான நோக்கங்கள் பற்றிய நியாய மான, உண்மையான அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்ட போதும், மற்றும் இதர பல நேரங்களிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய பதிவுகளைப் பார்க் கும் போது, விவசாயிகளின் இந்த அவநம்பிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று கூறமுடியாது. தனது பழைய நண்பர்கள் மூலம் போலி முதலாளித் துவத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஆதாரம் இல்லா மல் போனாலும், கார்ப்பரேட் குழுமங்களில் மிகப் பெரிய இரண்டு குழுமங்களான அதானி மற்றும் ரிலையன்ஸ் குழுமங்கள் மிகப் பெரிய அளவில் உணவு மற்றும் விவசாயத் துறை உற்பத்திப் பொருள் களின் சில்லறை விற்பனையில் நுழைந்திருப்பதையும், இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படும் நேரத்தை யும் தொடர்பு படுத்தி கவனிக்காமல் இருக்க முடியாது.
அரசின் மிகமிகக் குறைந்த அளவிலான புரிதலையே பிரதிபலிக்கிறது
விவசாய உற்பத்திப் பொருள்களின் சந்தை குழுக் களுக்கு வெளியே வர்த்தகர்களும், விவசாயிகளும் மிகப் பெரிய அளவில் பங்கெடுத்துக் கொள்வதற்கு அனுமதிப்பது என்ற கருத்து ஏற்கெனவே பல் வேறுபட்ட வடிவங்களில் இடம் பெற்றுள்ளது. அப் படியே இல்லாவிட்டாலும், ஒட்டு மொத்த விவசாய உற்பத்திப் பொருள் வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு அளவில்தான் இந்த சந்தைக் குழுக்கள் கையாள் கின்றன. ஆனாலும், விவசாய உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் விவசாயப் உற்பத்திப் பொருள் களை தேர்ந்தெடுப்பது மற்றும் உற்பத்திப் பொருள் களுக்கு விலை நிர்ணயம் செய்வது என்ற முக்கிய மான பங்கை இந்த சந்தைக் குழுக்கள் ஆற்றி வரு கின்றன. இந்த சந்தைக் குழுக்களையும், அவற்றின் மண்டிகளில் வியாபாரம் நடைபெற உதவி செய்யும் தரகர்களையும் மிகுந்த கேடு பயப்பவர்கள் என்று சித்தரிப்பது, விவசாய உற்பத்திப் பொருள் சந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய சரியான புரிதல் அரசுக்கு இல்லை என்பதையே காட் டுகிறது. விவசாய உற்பத்திப் பொருள் வர்த்தகத்தின் மிகப் பெரிய சுற்றுச் சூழல் நடைமுறையின் ஒரு பகு தியாகவே இந்த தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மண்டிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிக நன்றாக அறிந்த வர்களாகவே உள்ளனர். மண்டி நடைமுறையில் ஏதேனும் குறைகள் இருந்தபோதிலும், விவசாய உற் பத்திப் பொருள் வர்த்தகத்தில் மிகமிக முக்கியமான ஒரு பகுதியாகவே அதனை அவர்கள் பார்க்கின்றனர். சந்தைக் குழுக்களின் மண்டி நடைமுறையை நீக்கு வது பற்றி இந்த சட்டம் எதையும் கூற வில்லை என்ற போதிலும், விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் அளவில் சந்தை மண்டி நடைமுறையை விட கார்ப் பரேட் வர்த்தகத்திற்கு முன்னுரிமை தந்து, இத்தகைய சந்தை மண்டி அல்லாத தனியார் வர்த்தகர்களுக்கு ஆதரவு அளிப்பதும், கவலையை ஏற்படுத்துவதற் கான காரணங்களாக அமைகின்றன. விவசாய உற் பத்திப் பொருள்களை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்யும் நடை முறையை கைவிடுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் எடுத்துக் காட்டு
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள், இந்த விஷயத்தில் தங்களை மிகுந்த அளவில் கவலை கொள்ளச் செய்வதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மாநிலங்களில் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான விவசாய உற்பத்திப் பொருள் கொள்முதல், குறைந்த பட்ச ஆதரவு விலை யின் அடிப்படையில் தொடர்ந்து நீடிக்குமா என்ப தைப் பற்றிய கவலை இந்த மாநிலங்களின் விவசாயிகளுக்கு உள்ளது. விவசாய உற்பத்திப் பொருள்கள் குறைந்த அளவு ஆதரவு விலையில் அரசால் கொள் முதல் செய்யப்படும் நடைமுறை 2006 ஆம் ஆண் டில் பீகார் போன்ற மாநிலங்களில் கைவிடப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள் இத்தகைய அச்சங் களை பலம் பெறச் செய்கின்றன. மண்டிகள் நடை முறை கைவிடப்பட்ட போது, பெரும்பாலான விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலையே விவசாயிகளுக்குக் கிடைத்தது. எடுத்துக் காட்டாக குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண்டால் ஒன்றுக்கு 1,850 ரூபாய் என்ற விலையில் ஒரு குவிண் டால் ராகியை விற்ற பீகார் விவசாயிகள், அதன் பிறகு குவிண்டால் ரூபாய் 1,000 க்கும் குறைவாக ராகியை தாங்கள் விற்றதாகக் கூறினர். குறைகள் இருந்த போதிலும், பிராந்திய வேறுபாடுகள் நிலவிய போதும், குறைந்த பட்ச ஆதரவு விலையில் விவசாய உற்பத் திப் பொருள்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும் நடைமுறை தொடர்வதற்கு சந்தைக் குழு மண்டிகள் மிகமிக இன்றியமையாதவை என்று உறுதி செய்யப் பட்டது.
சில்லறை விலைகள் உயர்ந்த அளவில் இருந்த போது, ஒட்டு மொத்த விலைப் பட்டியல் புள்ளி விவரங்கள், பெரும்பாலான விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு பண்ணை நுழைவாயில் விலை குறைந்து போனது என்று தெரிவிக்கிறது. நெல்லும், கோதுமையும் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது அதிகரித்த போதிலும் இது நிகழ்ந்துள்ளது. அனைத்துலக விலை அதிகமாக இருந்தபோதிலும், பாசுமதி அரிசியின் விலை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்து போனது. பண்ணை வாயில் விலையை உயர்த்துவதில் சந்தை குறுக்கீடு வரையறை செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப் படாத பெரும்பான்மையான பயிர்களுக்கு இந்த கொள்முதல் விலை வீழ்ச்சி கடுமையானதாக இருந்தது. அரசின் தலையீடு இல்லாத காரணத்தால், பருத்தி போன்ற பணப் பயிர்களின் விலைகளும் கூட வீழ்ச்சி அடைந்தன. பயிர் செய்வதற்கான முதலீட்டுச் செலவுகள் அதிகமாக ஆகிவிட்ட நிலையில், அவற் றுக்கான ஆதாயம் நிறைந்த விலையை சந்தை அளிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில், மசூர் மீது இறக்குமதி வரியை உயர்த்துவது, வெங்காய ஏற்றுமதி மீது தடை விதிப் பது போன்ற குறுக்கீடுகளை அரசு அவ்வப்போது செய்து கொண்டிருந்தது, விலை நிர்ணய நடை முறையை சந்தையிடம் விட்டுவிடும் அரசின் நோக் கம் பற்றிய சந்தேகத்தை வல்லுநர்கள் எழுப்பவும் செய்தனர். விவசாயிகளுக்கு இடையேயும், இத்த கைய சீர்திருத்தங்களின் அறிவிக்கப்பட்ட நோக்கங் களுக்கு இடையேயும் நம்பிக்கையின்மையை முக்கி யமாக எதிரொலிப்பதையே விவசாயிகளின் போராட் டங்கள் காட்டுகின்றன.
நன்றி: 'தி இந்து', 21.09.2020
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment