டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- மாநிலங்களவையில் எட்டு எம்.பி.க்களின் இடைநீக்கம் உத்தரவை திரும்பப்பெறும்வரை, நாடாளுமன்றத்தின் எஞ்சிய கூட் டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும் இரு அவைகளில் இருந்தும் வெளிநடப்புச் செய்தனர்.
- எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக மா நிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க் களுக்கு ஆதரவாக பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளார்.
- தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் முறையை வருகிற டிசம்பர் வரை நீடித்திட சிறிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மிகப் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 2021 வரை வீட்டில் இருந்தபடியே பணி செய்திட ஊழியர்களைப் பணித்துள்ளன.
- கரோனா தொற்று அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அதற்கென தனியாகவே ஒரு காப்பீட்டுத் திட்டத்தை எல்.அய்.சி. கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த சூழலில், அத்தியாவசிய பொருட்கள் சட்ட மசோதா, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, இந்திய தொழில் நுட்பக் கழக (திருத்த) மசோதா, கொள்ளை நோய்கள் (திருத்த) மசோதா, கம்பெனிகள் (திருத்த) மசோதா, தேசிய தடய் அறிவியல் பல்கலை மசோதா மற்றும் ராஷ்டிரிய ரஷா பல்கலை மசோதா என ஏழு மசோதாக்களை மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையிலும், அதே போல, தொழிலாளர்கள் சம்மந்தமான மூன்று மசோதாக்களை மக்களவையிலும் அரசு நிறைவேற்றிவிட்டது.
- சூரத், போபால், பகல்பூர், அகர்தாலா, ராய்பூர் ஆகிய நகரங்களில் உள்ள அய்.அய்.டி. தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களையும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவித்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.
தி டெலிகிராப்:
- இந்திய - சீன லடாக் பகுதி எல்லைப் பிரச்சினையில் இந்தியா ஏப்ரல் 2020-க்கு முன்பிருந்த நிலையை உறுதி செய்யாமல், தற் போதுள்ள நிலையை உறுதி செய்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- வேளாண் மசோதா, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிறிய விவசாயிகளை பெரிய சுறாக்கள் விழுங்கிடும் அபாயம் உள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து:
- இந்தி தெரியவில்லை என்றால் கடன் இல்லை என்று சொன்ன இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கங்கை கொண்ட சோழபுரம் கிளை மேலாளர், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- குடந்தை கருணா
23.9.2020
No comments:
Post a Comment