அமைச்சர் தகவல்
சென்னை,செப்.3 ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் வாழ்நாள் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட் டையன் தெரிவித்தார். தமிழகத் தில் கரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள் நேற்று (1.9.2020) திறக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற் றாண்டு நூலகத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடு களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 160 நாட்களுக்கு பின் 32 மாவட்டங்களில் உள்ள 3,785 நூலகங்கள் திறக்கப் பட்டுள்ளன. அனைத்து நூல கங்களிலும் புத்தகங்களை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை படிக்கலாம். கல்விக் கட்டணம் செலுத்த வற் புறுத்தும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் அளித்தால் உடனே உரிய நட வடிக்கை எடுக்கப்படும். கரோனா பாதிப்பைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களுக்கு வழங்கப்பட்ட சான் றிதழ்களுக்கான வாழ்நாள் காலம் 7 ஆண்டுகள்தான். அந்த கால அவகாசம் முடிந்தபின் மீண்டும் அவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment