மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, செப்.30 திருமணம், இறுதி  நிகழ்ச்சிகள், சந்தைகள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அப ராதம் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய் துள்ள பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 9-ஆம் தேதி முதல் எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்? தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எத்தனை பேர் உயிர் பிழைத் தனர்?


எத்தனை பேர் உயிர் இழந்தனர்? தனியார், அரசு மருத்துவமனை களில் கரோனா தொற்று நோயாளி களுக்கு படுக்கை உள்ளிட்ட இதர வசதிகள் என்னென்ன உள்ளது? என்பது குறித்த விவரத்தை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிடும் புள்ளிவிவரத்துக்கும், தமிழக அரசு வெளியிடும் புள்ளிவிவரத்துக்கும் முரண்பாடு உள்ளது. பொதுமக்கள் முறையாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக் கின்றனரா? என்று கண்காணிக்கப் படவில்லை என்று வாதிட்டார்.


அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் ஆர்.விஜய குமார், கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் விவரத்தை செய் திக்குறிப்பாக தினமும் காலை 9 மணி, மாலை 6 மணி என்று இருமுறை தமிழக அரசு வெளியிடுகிறது. இதில், அனைத்து விவரங்களும் மாவட்ட வாரியாக வழங்கப்படுகின்றன என்று வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞர் சுனிதாகுமாரி ஆஜராகி வாதிட்டார்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி வெளி யிடும் கரோனா தொற்று குறித்த புள்ளிவிவரத்தில் சில முரண்பாடு உள்ளது. எனவே கரோனா தொற் றால் மாநகரங்கள், மாவட்டங்கள் அளவில் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை சரியானதாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் ஒன்றாக வெளியிட வேண்டும். செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் அரசு இணைய தளம் சேவையை 2 வாரத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


திருமண நிகழ்ச்சிகள், இறுதி நிகழ்ச்சிகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடும்போது, அவர்கள் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியை கடைப்பிடிக் கின்றனரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதில், யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையின் அடிப்படையில், அவர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் வழங்க சாத்தியம் உள்ளதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.


முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா மலும் இதுபோன்ற நிலைமை இனியும் தொடர்ந்தால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண் டிப்பாக பல மடங்கு அதிகரித்துவிடும். எனவே, இந்த உத்தரவின்படி எடுக் கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக் கையை தமிழக அரசு வருகிற 16-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment