செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

செய்தியும், சிந்தனையும்....!

குதிரைக்குமுன் வண்டியா?


தேசிய கல்விக் கொள்கை குறித்து இணைய வழியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் இன்று கருத்துக் கேட்பு.


இந்தக் கல்வி குறித்து அமைச்சரவை முடிவுக்கு முன்னதாக அல்லவா கேட்டிருக்கவேண்டும். வண்டிக்கு முன் குதிரையா? குதிரைக்கு முன் வண்டியா? ஆமாம், ஏற்கெனவே பொது மக்கள், மாநில அரசுகள் தெரிவித்திருந்த கருத்துகள் என்னாச்சு?


கோவில்களும் இடம்பெறுமா?


ஆக்கிரமிப்புகளை அகற்றிட சட்டம்: தமிழக அரசு அறிவிப்பு.


வரவேற்கத்தக்கதே! தமிழ்நாட்டில் 74,450 கோவில்கள் ஆக்கிரமிப்பு! அவற்றை அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம் (14.9.2010) கூறியதே - அவற்றையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசு அகற்றுமா?


‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!


கரோனா காலத்தில் தனியார் ஆம்புலன்சுகள் 20 மடங்கு கூடுதல் கட்டணம்.


அரசு எவ்வளவோ உத்தரவு பிறப்பித்தும், எச்சரிக்கையும் விடுத்தும் இந்தக் கரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இலட்சக்கணக்கில் பணத்தைப் பறிப்பது தொடரத்தான் செய்கிறது - அதன் வழியே ஆம்புலன்சும்; அரசு என்ன செய்யப் போகிறது - வெறும் காகித உத்தரவுகள்தானா?


'கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!' - வடலூர் இராமலிங்க அடிகளார்.


கேட்டாரே ஒரு கேள்வி?


வேளாண் சட்டங்களைப் பற்றிப் பேச விவசாயியாக இருக்க அவசியம் இல்லை. - தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.


ஏழை, எளிய மக்களின் வறுமை நிலையைப்பற்றிப் பேச பொருளாதாரம் படித்திருக்க வேண்டும், மருத்துவமனையைப்பற்றிப் பேச டாக்டராக இருக்ககவேண்டும் என்று கூடச் சொல்லுவார்களோ! தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிப்பது எப்படி என்பதுதான் கேள்வி. முதலில் அவர் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி.,க்குப் பதில் சொல்லட்டும் முதலமைச்சர்.


சட்டம் - ஒழுங்கு படும்பாடு!


தமிழ்நாடு அமைச்சரின் தனி உதவியாளர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடிக்கப்பட்டு நகைகள் பறிப்பு என்பது செய்தி.


அமைச்சரின் உதவியாளருக்கே இந்நிலை; செய்தித் தாள்களைப் புரட்டினாலே வழிப்பறி, கொலை, கொள்ளைதானா?


'நல்லா இருக்கே' தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு!


பேன் குத்திக் கொண்டு இருக்கிறதா?


விழுப்புரம் - சித்தேரியில் சூதாட்டம், குடி - இவைகளில் மூழ்கிய கணவரின் கொடுமையால் மனைவியும், மகளும் தற்கொலை!


கரோனா எப்படியெல்லாம் பாழ்படுத்தப் போகிறதோ! மது, சூதாட்டம் இவற்றை ஒழிக்க சட்டம் இருந்தும் என்ன பயன்? அவை பேன் குத்திக் கொண்டு கிடக்கிறதோ!


முதலமைச்சருக்கே இந்தக் கெதி!


திருப்பதி ஏழுமலையான் கோவில்  பதிவேட்டில் வேற்று மதக்காரரான (கிறித்துவர்) ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கையொப்பமிட வலியுறுத்தி பா.ஜ.க. - தெலுங்கு தேசக் கட்சிகள் போராட்டம்.


முப்படைகளின் தலைவர் குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் நாட்டில், முதலமைச்சர் எம்மாத்திரம்? இவை எல்லாம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்ததற்குப் பிறகு கொம்பு முளைத்து சீறுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.


வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்காவுக்குச் செல்லும் பிற மதத்தவர்கள் கையொப்பம் போடுகிறார்களா?


No comments:

Post a Comment