ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இரு அவைகளையும் புறக்கணித்து, அமைதியாக உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினர். பின்னர் குடியரசுத் தலை வரைச் சந்தித்து, வேளாண் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

  • தொழிலாளர் நலனைப் பாதிக்கும் மூன்று மசோதாக்களை மோடி அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. எந்த விவாதமும் இன்றி, நாட்டின் 50 கோடி மக்களின் நலனைப் பாதிக்கும் மசோதாவை சங் பரிவார் ஆதரவு பெற்ற தொழிற்சங்கமும் எதிர்த்துள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றியும், விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கைப் பற்றியும் அரசிடம் தகவல் எதுவும் இல்லை என மோடி அரசு மக்களிடம் உண்மையைச் சொல்ல தயங்குகிறது. தகவலை தர மறுப்பதன்மூலம், மக்களை நிர்வகிக்கும் தகுதியை அரசு இழக்கிறது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • இந்திய ராணுவத்திற்கு ரபேல் விமானத்தை விற்ற பிரெஞ்சு நாட்டு டசால்ட் அவியேசன் நிறுவனம், விமான தொழில் நுட்ப விஷயங்களை இந்திய நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

  • அரசமைப்புச் சட்டத்தில் விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ள நிலையில் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியதை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்தி வைக்கப் பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைய வேண்டிய கூட்டத் தொடர் எட்டு நாட்களுக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.


தி டெலிகிராப்:



  • கரோனா தொற்று காரணமாக மோடி அரசில் ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த சுரேஷ் அங்காடி மறைவுற்றார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை புறக்கணித்த நிலையில், மாநிலங்களவையில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

  • அசாம் மா நிலத்தில் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தில் இருந்து, நேரு தலைமையிலான ஆட்சி, 1984 தில்லியில் நடைபெற்ற கலவரம், மண்டல் குழு அறிக்கை, 2002 குஜராத் கலவரம் இவை குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் பாடங்களின் சுமையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை என கல்வித் துறை செய்தி கூறுகிறது.

  • மோடி அரசில் இருந்து தங்களது கட்சியைச் சேர்ந்த அமைச்சர், என்ன காரணங்களுக்காக வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகினார் என சிரோன்மணி அகாலி தள் கட்சியின் தலைவர் சுகிர் சிங் பாதல் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • மோடி அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைத்துள்ளது. ஜனநாயகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என பிரெஞ்சு நாட்டு பேராசிரியர் கிறிஸ்டப் ஜாப்ரிலெட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


தி இந்து:



  • அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும். உலக அளவில் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தின் பெயர் மாற்றம் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என அப்பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குனராக இருந்த டி.ஆர். ஜெகதீசன், ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


- குடந்தை கருணா


24.9.2020


No comments:

Post a Comment