உரத்தநாடு லிட்டில்வோஸ் பள்ளியின் நிறுவனர் அகிலன் மளிகை உரிமையாளர் கு.வீரமணி படத்திறப்பு நிகழ்ச்சி தமிழர் தலைவர் தலைமையில் 31.8.2020 அன்று மாலை ஆறு மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது.
கழகத் தலைவர் தமிழர் தலைவர் சார்பில் நல்லாசிரியர் தங்கராசன் படத்தினை திறந்து வைத்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், பட்டுக்கோட்டை பிருந்தாவனம் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் இராசமாணிக்கம், லிட்டில் ரோஸ் பள்ளியின் முதல்வர் மணி, பேரப் பிள்ளைகள் தீபக், அ.ஆதனா, உரத்தநாடு ஒன்றிய கழகத் தலைவர் த. செகநாதன், மாவட்ட கழக செயலாளர் அ. அருணகிரி, மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், கழகப் பொதுச் செயலாளர் இரா. செயக்குமார், நெடுவாக்கோட்டை ஒக்கநாடு மேலையூர் இராம. நடராசன், ஊராட்சி மன்றத் தலைவர் சா. செகதீசன், மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் சார்பில் பழனிவேல் வாண் டையார், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக, தமிழர்தலைவர் அவர்கள் சுயமரியாதை சுடரொளி நெடுவாக்கோட்டை வை. குப்புசாமி அவர்களின் தொண்டுள்ளத் தையும், உரத்தநாடு மக்கள் அவரால் பெற்ற கல்வி வாய்ப்புகளையும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரிடமும் தொடர்ந்து தம்மிடமும் காட்டிய பாசத்தையும், அவரது மறைவுக்குப் பின்னர் அதே பாசத்தை மறைந்த வீரமணி கொண்டிருந்த சிறப்புகளை, சனவரி 10ஆம் தேதி உரத்தநாட்டில் குடும்பத்தோடு சென்று ஒரு பவுன் மோதிரம் அணிவித்த நிகழ்ச்சியையும் நெகிழ்ச்சியை எடுத்துக்காட்டி, அவரது இணையர் தேனாம்பாள், மகன் வீ. அகிலன், சகோதரர்கள் கு. அய்யத்துரை, கு. ஆனந்தன், கு. வைத்தி லிங்கம் - பேரப் பிள்ளைகள் யாவரும் வீரமணி அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் அடைய விரும்பிய இலக்கினை அடைவதற்கு முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார். தொலைபேசியில் தேனாம்பாள், அகிலன், அய்யத்துரை ஆகியோரும் பேசி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை. இராமசாமி, ஒன்றிய ப.க. தலைவர் நெடுவை கு. நேரு, மாவட்ட ப.க. தலைவர் ந. காமராசு, ஒன்றிய கழகச் செயலாளர் ஆ. இலக்குமணன், நகர கழகத் தலைவர் பேரா. ரெ. இரவிச்சந்திரன், நகர கழகச் செயலாளர் ரெ. இரஞ்சித்குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராமகிருட்டிணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பாலகிருட்டிணன், தன்மானம், தென்னகம், நெடுவை கு. லெனின், ந.செயசீலன், வழக்குரைஞர் சி. கோவிந்தராசு, ஆசிரியர் ந. சங்கர், சக்கரக்கோட்டை மா. மதியழகன், பெஸ்ட் சுரேந்தர், சி.பி.எம். வெங்கடேசன், நெடுவை வெ. விமல், தொழிலதிபர் கே.எஸ்.பி. ஆனந்தன், ஆ. சக்ரவர்த்தி, ஆ.சுந்தர் பேரா. குட்டிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாத்துரை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment