புதுடில்லி, செப்.27 பாஜக தேசிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று (26.9.2020) அறிவித்துள்ளார்.
பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டித் தலைவர் முதல் தேசியத் தலைவர் வரை 3 ஆண்டு களுக்கு ஒருமுறை உள்கட்சித் தேர் தல் நடைபெறும். புதிய தலைவர் பொறுப்பேற்றதும் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பாஜக தேசியத் தலை வராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நி லையில் தேசிய நிர்வாகிகள் பட் டியலை ஜெ.பி.நட்டா நேற்று (26.9.2020) வெளியிட்டார்.
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராவது இதுவரை இடம் பெற்று வந்தனர். 1980இ-ல் பாஜக தொடங்கப் பட்டபோது தமிழ கத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ண மூர்த்தி தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் வரை அவர் உயர்ந்தார். அதன்பிறகு தேசிய செயலாளர் களாக இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா இருந்துள் ளனர். இல.கணேசன் தேசிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
2014 ஆக. 16ஆ-ம் தேதி தமிழிசை, தமிழக பாஜக தலைவரானபோது எச்.ராஜா தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய செயலாளராகவும், கேரள மாநில பொறுப்பாளராகவும் இருந்த எச்.ராஜாவுக்கு தற்போது எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. அதுபோல தமிழக பாஜக பொறுப் பாளராக இருந்த பி.முரளிதரரா வுக்கும் எந்தப் பொறுப்பும் வழங் கப்படவில்லை.
கருநாடகத்தைச் சேர்ந்த சி.டி.ரவி, ஆந்திரத்தைச் சேர்ந்த புரந் தரேஸ்வரி பொதுச் செயலாள ராக வும், தெலங்கானாவின் டி.கே.அருணா, கேரளத்தைச் சேர்ந்த அப்துல்லா குட்டி தேசிய துணைத் தலைவராகவும், தேஜஸ்வி சூர்யா தேசிய இளைஞரணித் தலைவ ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழகம் புறக்கணிக்கப் பட்டுள்ளதால் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment