புதுடில்லி, செப். 24 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று (23.9.2020) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து முறையிட்டனர்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்...
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா, ஆனந்த சர்மா, அகமது படேல், டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது இந்த விவகாரத் தில், குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங் களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா, எதிர்க்கட்சிகளின் கருத்தை ஏற்காமல் சர்வாதிகாரமாக நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை யும் குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், நாடாளு மன்ற வளாகத்தில் காந்தியார் சிலை அருகே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்,
இதற்கிடையே, மாநிலங்களவையை இன் றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத் துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேபோன்று மக்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment