சென்னை, செப். 4- கரோனா தடுப்பு 2ஆம் கட்ட ஆராய்ச்சிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ மருந்து சென்னைக்கு வந்தது.
கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி யில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து அய்தராபாத்தில் செயல்பட்டு வரும் ‘பாரத்பயோடெக்’ நிறுவனம் தயாரித் துள்ள தடுப்பு மருந்தை 2ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்துவதற்கான பரி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தின் ஆராய்ச்சி மய்யம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தின் முதல் கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், 2ஆம் கட்டமாக மனிதர்க ளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப் படவுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசியை பரிசோ தனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்), இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (டிசிஜிஅய்) சென்னையைத் தேர்வு செய்துள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் இரா மச்சந்திரா மருத்துவமனையில் தலா150 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதில் முதல்கட்டமாக 200டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்கு தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10ஆம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்துக்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பு மருந்து போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திஉருவாகிறதா என 6 மாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். 2ஆம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து 3ஆம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு, தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment