தண்டராம்பட்டு, செப்.29 சாத்தனூர் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் காட்டுப்பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் சிறிது தூரம் எடுத்துச் சென்று உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சாத்தனூர் அணை காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment