ஏழைகளின் பொருளாதாரத்தை அழித்து விட்டது மோடி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 2, 2020

ஏழைகளின் பொருளாதாரத்தை அழித்து விட்டது மோடி அரசு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு



புதுடில்லி,செப்.2, ‘‘எளிய மக்களின் அமைப்புசாரா பொருளாதாரத்தை மோடி அரசு அழித்துவிட்டது’’ என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘பொருளாதாரத்தை பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் 4 நிமிட வீடியோ சீரிஸ் ஒன்றினை தனது சமூக வலைதளங்களில் நேற்று 31.8.2020 வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கடந்த 2008ஆம் ஆண்டில், மிகப்பெரிய பொருளாதாரப் பின்ன டைவை உலக நாடுகள் சந்தித்தன. அதில், அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளும் தப்பவில்லை. அமெரிக்க வங்கிகள் பல திவாலாகின. பெருநிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குச் சென்றது. அய்ரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை நிலவியது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் திறமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மட்டும் அந்த சர்வதேச பொருளாதார சுனாமியிலிருந்து தப்பியது.


ஏனெனில், அன்றைய மன்மோகன் சிங்கின் அரசு எளிய மக்களின் அமைப்பு சாரா பொருளாதாரத்தைப் பாதுகாத்தது. அதனாலேயே இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி நிலைத் தன்மையுடன் இருந்தது. பா.ஜ.க. அரசு இதை செய்யத் தவறிவிட்டது. விவசாயிகள், கூலித் தொழிலாளார்கள், சிறுவணிகர்கள் ஆகியவர்களை உள்ளடக்கிய அமைப்பு சாரா பொருளாதாரமே 90 சதவிகித மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இப் போது அதனை சிதைத்துவிட்டதால் வேலைவாய்ப்பின்மை தலைவிரித் தாடப் போகும் அபாயம் நிகழப் போகிறது.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி அமல் மற்றும் திட்டமிடப்படாத கரோனா ஊர டங்கு போன்றவற்றால் பொருளா தாரம் மிகப்பெரிய சீரழிவை சந்தித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டது ஊர டங்கு. எளிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களை எல்லாம் பொதுமக்கள் தற்போது புரிந்துகொள்ள ஆரம்பித்து விட் டார்கள். இனி இந்த நாடு ஒன்று திரண்டு உங்களை எதிர்க்கப் போகிறது. இவ்வாறு அந்த காணொலி செய்தியில் கூறியுள்ளார். மேலும் நடைபெற இருக்கும் மழைக் காலக் கூட்டத்தொடரில் இந்த பொருளாதாரத் தாக்குதல் பற்றியும், சீனாவுடனான எல்லைப் பிரச் சினையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் கேள்வி எழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment