டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9% சரிவு. விவசாயத்துறை தவிர்த்து, ஏனைய துறைகளான உற்பத்தித்துறையில் 39.3%, கட்டுமானத்துறையில் 50.3%, பொது நிர்வாகம், பாதுகாப்புத்துறையில் 10.3%, சுரங்கத்துறையில் 23.3%, மின்சாரம், கேஸ் உள்ளிட்ட சேவைகள் துறையில் 7%, வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து, தகவல் சேவைகளில் 47% சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காலாண்டில் எட்டரை லட்சம் கோடி அளவிலான வர்த்தகம் பறிபோகியுள்ளது.
- ஏற்கனவே ஆறு விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமம் கையகப்படுத்திய நிலையில், தற்போது மும்பை விமான நிலையத்தையும், இதுவரை நிர்வகித்து வந்த அய்தராபாத் நகரைச் சேர்ந்த ஜி.வி.கே. நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தியுள்ளது.
- சமூக வலைதளத்தில் நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷன், ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்த ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.
- மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு நியாயமற்ற தாக இருக்கிறது. விமான போக்குவரத்தை அனுமதிக்கும் அரசு, ரயில் போக்குவரத்துக்கு தடை என்கிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கத் தடை, ஆனால், தேர்வுகள் நடத்தப்படும் என்பது முரணாக உள்ளது என தனது கட்டுரையில் ஆகார் படேல் கூறியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- இந்தியப் பொருளாதார வீழ்ச்சியடையும் என எங்களது எச்சரிக்கையை மோடி அரசு புறக்கணித்தது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியில் இருந்து மீள பல மாதங்கள் ஆகும் என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- கிராமப்புறம் மற்றும் மலைப் பிரதேசங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முது நிலைப்படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் இந்திய மருத்துவ கவுன்சில் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. திமுக ஆட்சியில் 1989-ஆம் கொண்டு வரப்பட்ட கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு முது நிலைப் படிப்பில் தரப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டது. இதை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2017இல் அறிவிப்பை வெளியிட்டது. இதனை எதிர்த்து மருத் துவ சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தி டெலிகிராப்:
- 2014 தேர்தலில் முகநூல் நிறுவனம், மோடிக்கு ஆதரவாக செயல்பட்டதை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்டிரீட் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு டில்லியில் நடந்த வன்முறைகளிலும் முக நூல் நிறுவனத்தின் செயல்பாடு, ஒரு சார்பாகவும், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும் இருப்பதாகவும், இது தொடர்பான வழக்கில் முக நூல் நிறுவனத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என டில்லி வன்முறை குறித்து ஆராய அமைக்கப்பட்ட டில்லி சட்ட மன்றக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- கரோனா கால ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, முறைசாரா துறையை முற்றிலுமாக அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்த மோடி அரசு துணை போகிறது. இது மக்களை அடிமைகளாக்கும் முயற்சி என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
- குடந்தை கருணா
1.9.2020
No comments:
Post a Comment