மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 24, 2020

மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு!

விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத தமிழக அரசு!


சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!



சென்னை, செப். 24- மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன் றத்தை நாட முடிவு செய்துள்ளது.


இந்நிலையில் விவசாயிக ளைப் பற்றி துளியும் கவலைப் படாத துப்புக் கெட்ட உணர்ச்சியே இல்லாத எடப்பாடி அரசு தமிழகத்தில் உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி வருமாறு:-


மத்திய அரசின் வேளாண் சட்டங் கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில், கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளது.


கேரள அரசு, மாநில உரி மைகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்திடப் பாடுபடும் அரசு;  வேளாண் சட்டங்களில் பொதிந்துள்ள விபரீதத்தை விளங்கிக் கொண்டுள்ள அரசு. இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே!? எடப்பாடி அரசு - அது மாநில உரிமை களைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலனைத் தவிர, வேறு எதுகுறித்தும் சுரணை இல்லாத அரசு; விவசாயி களைப் பற்றியோ, வேளாண் சட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு களைப் பற்றியோ, துளியும் கவலைப்படத் துப் பில்லாத அரசு!


இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment