‘‘ஊசி மிளகாய்'' - ‘முகத்தில் பிறந்தவாளுக்குள்' இப்படி ஒரு மோதலா?
‘நமோ நாராயணா!'
தமிழ்நாடு பிராமண சங்கம் - Tamilnadu Brahmin Association - (‘தாம்பிராஸ்‘) அக்டோபர் 22 இல் நடந்த ஜெனரல்பாடி கூட்டத்தின் நடவடிக்கை புத்தகத்தைக் கொண்டு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காட்டவேண்டும். அதில் நாராயணன் என்ற அதன் தலைவர்மீது பாலின குற்றச்சாட்டு ‘மீ டூ' (Me too) இயக்கத்தவரால் சுமத்தப்பட்டதால், அவர் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மைதான் என்பதை ஆதாரப்பூர்வமாக காட்டவேண்டும் என்று ஜஸ்டீஸ் பி.டி.ஆஷா அவர்கள் பிராமண சங்கத்தின் வக்கீலுக்குத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் (இன்னும் 5 நாள்களில்) கொண்டு வந்து காட்ட கெடு விதித்துள்ளார்.
இது ஏற்கெனவே போடப்பட்ட சிவில் வழக்கு ஒன்று, இந்த நாராயணன் இந்தியன் வங்கிக் கணக்கை ஆபரேட் செய்யக்கூடாது; காரணம், இரண்டு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறுதான்.
இந்த கணக்கு முடக்கப்பட்டு விட்டது. காரணம், நீக்கப்பட்ட துணைத் தலைவர் ஹரிகரமுத்து என்பவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் என்று அவருடைய வக்கீல் தெரிவித்தார்.
இந்த துணைத் தலைவர் ஹரிகரமுத்து ஜெனரல்பாடி மீட்டிங்கை ஜூன் 2 ஆம் தேதி (2019) கூட்டியது சட்ட விரோதம் - அந்த சங்கம் - தாம்பிராஸ் விதிகளின்படி என்றார், உயர்நீதிமன்றத்தில்.ஆனால், ஹரிகரமுத்துவின் வக்கீலோ, பெரும்பாலான மெம்பர்கள் பிராமண சங்கத் தலைவர் நாராயணன்மீது மிகவும் கோபப்பட்டார்கள். காரணம், அவர்மீது பாலின குற்றச்சாட்டு Me too பிரச்சினையால் சிக்கியதால்.
இந்தக் குற்றச்சாற்று தனிப்பட்ட நபரின் நடத்தையைப் பொறுத்தது என்றாலும்கூட, இதனால் சங்கத்திற்கு அபகீர்த்தி - கெட்ட பெயர்தான் ஏற்பட்டது என்று கூறினார், கோர்ட்டில்!
முகத்தில் பிறந்தவாளான இவாளுக்குள்ளே இப்படி ஒரு மோதலா? ‘ஈசுவரா, நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கே!' என்றுதான் அவாளில் சிலர் முணுகி முக்கிக் கொண்டுள்ளனர்!
‘‘பாலியல் குற்றம் என்ன புதுசா? அதைப் போய் பெரிசுபடுத்துவாளா? நம்ம காஞ்சி பெரியவாள் ஜெயேந்திரர்மீது அனுராதா ரமணன் கூடத்தான் கட்டுரை எழுதியே ‘‘சார்ஜ்'' பண்ணினா - அதனால் என்ன மடாதிபதி ஜெயேந்திரரின் பெருமை ஏதோ கொஞ்சம் ஜெயில், பெயில் என்றெல்லாம் போனபோது, கொஞ்சம் சரிஞ்ச மாதிரி - பெரிசா ஆயுடுச்சா?
பூ தேவாளுக்கெல்லாம் இதெல்லாம் சகஜம்தானே! தேவர்களுக்குத் தலைவன் இந்திரன் ஆயிரம் ................. பெற்றதெல்லாம் (அகலிகை கதை) கேட்ட நம்மவாளுக்கு இது ஒரு பெரிசா?'' என்று கேட்கிறார் ‘ஸ்மார்த்த விசாரம்' செய்த பிராமணப் பெரியவா ஒருவர்!
‘‘இட ஒதுக்கீடு மாய்க்கப்பட, ‘சூத்திரர்கள்' கல்வி, உத்தியோகம் ஒழிக்கவே தாம்பிராஸ் சங்கம் தொடங்கப்பட்டது!
அதற்கு இப்படி ஒரு சோதனையா?
அதுவும் இந்தக் கதை - இந்த கரோனாவைவிட பெருந்தொற்றாக அல்லவா பரவிவிடும். இராவணன்மீது பழிபோட்ட நம்மீதே இப்படி ஒரு பழியா?
நமோ நாராயணா? நம் சங்கத்திற்கு இப்படி ஒரு சோதனை வரப்படலாமோ!'' என்று கூவுகிறார் நம்ம பிரபல பிரசங்கியான கருங்காலிபுரம் கணபதி சாஸ்திரிகள்!
- இப்படி ஒரு கனவு வரக் காரணம் படுக்கப் போகுமுன் ‘இந்து' (2.9.2020) ஏட்டில் வந்த மேற்கண்ட செய்தியைப் படித்துவிட்டு உறங்கியதால்போலும்!
Show records of last year’s
Thambraas meet, says HC
The Madras High Court on Tuesday directed the Thamizhnadu Brahmin Association (Thambraas) to produce the minutes of its general body meeting held on October 22 to find out whether the issue of no confidence against its president N. Narayanan, due to his name having been raised in the ‘Me Too’ movement, was discussed or not.
Justice P.T. Asha directed advocate G. Nanmaran, representing Thambraas, to produce the minutes by September 8.
The direction was issued while hearing arguments on a civil suit preferred by the association against Indian Bank for not letting its president to operate a bank account due to a dispute between two factions in the association. Mr. Nanmaran told the judge that the bank had taken the decision to freeze the account solely on the basis of a letter written to it by ousted vice-president N. Hariharamuthu.
He also stated that a general body meeting convened against his client by Mr. Hariharamuthu’s faction on June 2, 2019, was against the bylaws of the association. He said
Mr. Narayanan had actually conducted the general body meet on October 22, 2019 when over 1,500 members participated peacefully.
On the other hand, Ramaswamy Meyyappan, counsel for Mr. Hariharamuthu, said many members of the association were unhappy with Mr. Narayanan due to him bening named in the ‘Me Too’ controversy.
Though the charges were of a personal nature, they had brought disrepute to the association, he said.
He claimed that the president had to face flak from Securities and Exchange Board of India (SEBI), which had fined him for having reportedly duped investors, and hence that had also caused discontent among the members. He said the association had over four lakh members and that its general body consisted of around 3,000 members.
He further pointed out that the association remained unregistered till date though it was mandatory under the provisions of the Tamil Nadu Societies Registration Act of 1975 to register such associations. When the judge asked if the government could be ordered to take over the association, he said such a course could be adopted only if the members had not raised the issue.
According to him, the members had insisted upon getting the association registered long back. However, the president did not take steps in that regard. (‘The Hindu', 2.9.2020, Page 4).
No comments:
Post a Comment