லக்னோ, செப்.23 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சிறைச் சாலைகளில் அளவை மீறி 1 லட் சத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள விவரம் தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் ஆகியவை அரை மணி நேரம் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஏராள மான கேள்விகளை உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அந் தந்த அமைச்சகங்கள் பதிலளித்து வருகின்றன.
அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் எண் ணிக்கைகள் மாநில வாரியாகவும், அதனுடைய முழுக் கொள்ளளவு மற்றும் அதில் அடைக்கப்பட்டி ருக்கும் கைதிகளின் எண்ணிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 29 மாநிலங் களில் 1319 சிறைச்சாலைகள் உள் ளன. அதில் கைதிகளை அடைப் பதற்கான கொள்ளளவு 3,91,674 ஆக இருக்கிறது. ஆனால், 4,59,463 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள 31 சிறைச்சாலைகளையும் சேர்த்தால் மொத்தம் 1350 சிறைச்சாலைகள் உள்ளன. அதில் கைதிகளை அடைப் பதற்கான கொள்ளளவு 4,0,3739 ஆக இருக்கிறது. ஆனால், 4,78,600 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, நாட்டில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 72 சிறைச் சாலைகளில் கைதிகளை அடைப்ப தற்கான கொள்ளளவு 60,340 ஆக இருக்கிறது. ஆனால், அங்கு 1,0,1297 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா போன்ற பெருந் தொற்று காலங்களில் இவ்வாறு அளவை மீறி கைதிகள் அடைக் கப்பட்டு வைத்திருப்பது, தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்துவ துடன், வழக்கமான காலங்களிலும் சுகாதரமின்மைக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 144 சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு கைதிகளை அடைப்பதற்கான கொள்ளளவு 22,952 ஆக இருக் கிறது. அங்கு 21,599 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மொத் தம் 141 சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு கைதிகளை அடைப்பதற்கான கொள்ளளவு 23,392 ஆக இருக் கிறது. அதில், 14,707 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment