மாவட்டங்களுக்கு இடையே 7ஆம் தேதி முதல் பேருந்து, ரயில் இயக்க அனுமதி :தமிழக அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 3, 2020

மாவட்டங்களுக்கு இடையே 7ஆம் தேதி முதல் பேருந்து, ரயில் இயக்க அனுமதி :தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,செப்.3,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டு தலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழ் நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதுடன், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரை முறை களுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில், தற்போது தமிழ் நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொதுப் பேருந்துப் போக்குவரத்து, அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய உணவு விடுதிகள் உள்ளிட் டவைகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.20 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது மாவட் டத்திற்குள் மட்டும் பேருந்து போக்கு வரத்திற்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கியப் பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.


பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின் பற்றி வருகிற 7ஆம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட் டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொதுப் பேருந்துப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக் கப்படுகிறது.


மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்கு வரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி, வருகிற 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வு களை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடை வெளியை தவறாமல் கடைப்பிடிப்பது உள் ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட் டாயம் பின்பற்றினால், கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொது மக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment